நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம்.. 2 பேர் உடல் கருகி பலி.. அமெரிக்காவில் பரபரப்பு!

 
Florida

அமெரிக்காவில் நெடுஞ்சாலையில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஓகையோ மாகாணத்தில் உள்ள மாநில பல்கலைக்கழக விமான நிலையத்தில் இருந்து பம்பார்டியர் சேலஞ்சர் 600 ரக சிறிய விமானம் ஒன்று புறப்பட்டு, புளோரிடாவின் நேபிள்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கி, மீண்டும் அங்கிருந்து ஃபோர்ட் லாடர்டேல் எக்ஸிக்யூடிவ் விமான நிலையத்திற்கு செல்வதாக இருந்தது. இந்த விமானத்தில் 5 பேர் பயணித்தனர்.

புளோரிடா விமான நிலையத்தை நெருங்கும் போது இரு எஞ்சின்களும் செயலிழந்ததாக விமானி தரைக்கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். அவர்கள் விமானத்தை ஓடுபாதையில் அவசரமாக தரையிறக்கும்படி அறிவுறுத்தி, அதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

Florida

ஆனால், கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம், நேபிள்ஸ் நகர இன்டர்ஸ்டேட்-75 நெடுஞ்சாலையில், பைன் ரிட்ஜ் சாலை பகுதியில் விழுந்தது. கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம், நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு பிக்-அப் டிரக் வாகனத்தின் மேல் இடித்து, நெடுஞ்சாலையை தொட்டு, சுமார் 30 அடி தூரம் அங்குமிங்கும் ஓடி, பெரிய கான்க்ரீட் சுவற்றின் மீது மோதியது.

இதை தொடர்ந்து அந்த விமானம் தீப்பிடித்து எறிந்தது. இந்த விமானத்தில் இருந்த 2 பேர் உயிரிழந்தனர். விமானம் மோதியதில் டிரக்கின் மேற்பகுதி உடைந்தது. மோதிய அதிர்ச்சியில் அந்த டிரக் நிலைதடுமாறி ஓடி, சாலையில் கவிழ்ந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அதன் ஓட்டுநர் உயிர் தப்பினார்.

விமானம் விழுவதை கண்டு உதவ முன் வந்த பொதுமக்கள், அது தீப்பிடித்ததை கண்டு அங்கிருந்து ஓடிச் சென்றனர். இதை தொடர்ந்து, சாலையின் இருபுறமும் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும், மத்திய வான்வழி போக்குவரத்து நிர்வாகமும் இணைந்து சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றன.

From around the web