ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்த விமானம்.. 11 பேர் படுகாயம்.. செனகலில் பயங்கரம்

 
Senegal

செனகலில் ஓடுதளத்தில் சென்ற விமானம் ஒன்று அதிலிருந்து விலகி தாறுமாறாக ஓடி தவறி விழுந்து கோர விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் தலைநகர் டக்காரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து விமானம் ஒன்று புறப்பட்டது. போயிங் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானத்தில் 79 பயணிகள் உள்பட 85 பேர் இருந்தனர். ஆனால் ஓடுபாதையில் சென்ற அந்த விமானம் திடீரென தனது பாதையை விட்டு விலகி தாறுமாறாக ஓடியது.

Senegal

இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் பயத்தில் கத்தி கூச்சலிட்டனர். இதனையடுத்து சிறிது தூரம் சென்ற அந்த விமானம் தவறி விழுந்து விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் உடனடியாக பயணிகளை பத்திரமாக வெளியேற்றினர்.


எனினும் இந்த விபத்தில் 11 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து டக்கார் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

From around the web