குடியிருப்பின் மீது விழுந்து தீப்பிடித்த விமானம்.. பலர் உயிரிழப்பு.. அமெரிக்காவில் பரபரப்பு
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த பலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் கிளியர்வாட்டர் பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம், புளோரிடா மொபைல் குடியிருப்பு பகுதியில் விழுந்து தீப்பிடித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கிளியர்வாட்டர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
🚨BREAKING 🚨
— John Cremeans USA (@JohnCremeansUSA) February 2, 2024
Plane Crash In Clearwater, Florida: According to the FAA, a single-engine Beechcraft Bonanza V35 crashed into a residential area in Clearwater, Florida, around 7 p.m. local time after the pilot reported an engine failure. The flight originated from Vero Beach. pic.twitter.com/ayaR1HDz3d
இந்த விபத்தில், விமானத்தில் இருந்த பலர் உயிரிழந்ததாகவும், வீட்டில் இருந்த ஒருவர் உயிரிழந்ததாகவும் தீயணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். ஆனால் இந்த விபத்தில் எத்தனை பேர் உயிரிழந்தனர்? என்ற உறுதியான தகவல் வெளியாகவில்லை.
விமானம் ஒரு வீட்டின் மீது மோதியது என்றும், குறைந்தது மூன்று வீடுகள் தீயில் கருகி சேதமடைந்ததாவும் தீயணைப்பு துறை அதிகாரி தெரிவித்தார்.
அந்த விமானத்தின் ரேடார் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு முன்பாக, அருகில் உள்ள செயின்ட் பீட்-கிளியர்வாட்டர் சர்வதேச விமான நிலையத்தை விமானி தொடர்பு கொண்டு அவசரநிலையை அறிவித்ததாக அந்த அதிகாரி கூறினார். விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.