சூப்பர் மார்க்கெட்டில் விழுந்து நொறுங்கிய விமானம்.. 87 வயது விமானி பலி! அதிர்ச்சி வீடியோ

 
Plano

அமெரிக்காவில்  சிறிய ரக விமானம் ஒன்று சூப்பர் மார்க்கெட்டின் பார்க்கிங் தளத்தில் விழுந்து நொறுங்கிய விபத்தில் விமானி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் போல்வார்டு பகுதியில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் ஒன்று ப்ளேனோ ஆகும். அந்த நகரில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் சிறிய ரக விமானம் ஒன்று திடீரென விழுந்து நொறுங்கி விபத்திற்கு உள்ளானது. அங்கிருந்த சூப்பர் மார்க்கெட் ஒன்றின் பார்க்கிங் தளத்தில் விமானம் விழுந்த போது, அங்கு நிறுத்தப்பட்டு இருந்த இரண்டு கார்கள் தீப்பிடித்து எரிந்தன.

இந்த விபத்தில் விமானத்தை ஓட்டி வந்த விமானி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சூப்பர் மார்க்கெட்டின் பார்க்கிங் தளத்தில் விழுந்த போது யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. விமானம் விழுந்த இடத்தில் ஆளுயரத்திற்கு தீப்பற்றி எரிந்தது.

Plano

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை நீண்ட நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து விமானத்தில் பயணித்த விமானியின் உடலை மீட்டு விசாரணையை துவக்கினர். இந்த சிறிய ரக விமானம் எந்த ஊரில் இருந்து வந்தது, இதை ஓட்டி வந்தவர் யார் என்பது தொடர்பான எந்த தகவல்களும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை.

இதையடுத்து அருகாமையில் உள்ள விமான நிலையங்களில் சிறிய ரக விமானம் ஏதேனும் புறப்பட்டுச் சென்றதா என போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையமும் விசாரணை மேற்கொண்டனர்.


விமானப் பாதுகாப்பு ஆய்வாளர் பிரையன் ரூட் கூறுகையில், அருகில் உள்ள ஏர் ஸ்டிரிப்க்கும் விபத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள இன்னும் தரவுகளைப் பார்த்து வருகிறோம். மீடியாக்களுடன் பகிர்ந்து கொள்ள விமானி பற்றிய புதிய தகவல்கள் எதுவும் அவரிடம் இல்லை.

விமானி மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்கு இடையேயான தகவல்தொடர்புகளை NTSB தொடர்ந்து தேடுகிறது. கறுப்புப் பெட்டி அல்லது விமானத்தில் இருந்த மற்றொரு வகை விமானத் தரவு ரெக்கார்டரை அவர்கள் தேடுகிறார்கள், இருப்பினும் இந்த வகை விமானங்களில் இது தேவையில்லை என்று ரூட் கூறுகிறார்.

From around the web