சூடானில் விமானம் விபத்து.. ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!

 
Sudan

சூடானில் தொழில்நுட்ப கோளாறால் பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியதில் 4 ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூடானில் உள்நாட்டு போர் உச்சத்தில் உள்ளது. பொதுவாக உள்நாட்டு போர் அரசுக்கும் - மக்களுக்கும் இடையில் நடக்கலாம். அரசுக்கும் போராளிகளுக்கும் இடையில் நடக்கலாம். அரசுக்கும் ராணுவத்திற்கும் இடையில் கூட நடக்கலாம். ஆனால் சூடானில் நடப்பது அங்கே இருக்கும் இரண்டு வகையான ராணுவ படைகளுக்கு இடையிலான மோதல். அங்கே உள்ள ராணுவம் மற்றும் ஆர்எஸ்எப் எனப்படும் ராபிட் சப்போர்ட் போர்ஸ் இடையே இந்த மோதல் நடக்கிறது.

கடந்த 2021-ல் சூடானில் ஆட்சியை கவிழ்த்த போது இவர்கள் இரண்டு தரப்பும் ஒன்றாகவே இருந்தன. ஆனால் கடந்த சில காலமாக இவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. சமீபத்தில் ஆர்எஸ்எப் அமைப்பை ராணுவத்துடன் இணைக்கும் முடிவு எடுக்கப்பட்டது. அப்போதுதான் நாட்டை யார் ஆள்வது, ராணுவத்தை யார் கட்டுப்படுத்துவது என்ற மோதல் ஏற்பட்டது.

plane

இந்த மோதல் தற்போது அங்கே மிகப்பெரிய உள்நாட்டு போராக மாறி உள்ளது. ராணுவம் பெருசா - ஆர்எஸ்எப் பெருசா என்று மாறி மாறி மோதிக்கொள்கிறார்கள். இதில் இரண்டுமே ராணுவம்தான் என்பதாலும் இரண்டு தரப்பிடமும் ஆயுதங்களும் பயிற்சி பெற்றவர்களும் இருப்பதாலும் மோதல் இப்போதைக்கு முடியாது. மோதல் இன்னும் மோசமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கே நடக்கும் உள்நாட்டு போரில் சுமார் 2,000 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், போர் நடந்து 100-வது நாளை எட்டிய நிலையில், சூடான் விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்று சென்றது. திடீரென அது விபத்தில் சிக்கியது. இதுகுறித்து சூடான் ராணுவம் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட ஒரு செய்தியில், ஆன்டனோவ் பயணிகள் விமானம் ஒன்று தொழில் நுட்ப கோளாறால் விபத்தில் சிக்கியது.

Dead Body

இந்த விபத்தில் 4 ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். ஒரு குழந்தை உயிர் தப்பியது என தெரிவித்து உள்ளது. போர் 100-வது நாளை எட்டிய நிலையில், நேற்று தர்பர் பகுதியில் நடந்த ஏவுகணை தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். இந்த போரால், ஆயிரக்கணக்கான குடிமக்கள் எல்லையை கடந்து வேறு பகுதிகளுக்கு தப்பி ஓடுகின்றனர்.

From around the web