கொலம்பியாவில் விழுந்து நொறுங்கிய விமானம்.. 2 பேர் பலி.. மோசமனா வானிலையால் நிகழந்த சோகம்!

 
Colombia

கொலம்பியாவில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் வடக்கு பகுதியில் உள்ள அட்லாண்டிகோ மாகாணத்தில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியது. சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். உடனடியாக இதுகுறித்து அவசர உதவி எண் மூலம் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

Colombia

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து பார்த்தபோது, விமானத்தில் இருந்த இரண்டு பேரும் உயிரிழந்தது தெரியவந்தது. அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்றும் மாகாண காவல்துறை தலைவர் ஜான் உர்ரேயா தெரிவித்தார்.


அட்லாண்டிகோ மாகாணம் மற்றும் சுற்றியுள்ள சில பகுதிகளில் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

From around the web