கனடாவில் தலை குப்புற கவிழ்ந்த விமானம்!!

 
Delta

சாலை விபத்துகளில் பேருந்துகள் , லாரிகள் தலை குப்புற கவிழ்ந்த காட்சிகளை பார்த்து இருப்போம். கடுமையான பனிமழைப் பொழிவின் போது கனடா நாட்டின் ட்ரோண்டோ நகரில் தரை இறங்கிய டெல்டா விமானம் சறுக்கிப் பாய்ந்ததில் தலை குப்புற கவிழ்ந்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு என்பதாலோ என்னவோ, விமானத்தில் தீப்பிடிக்க வில்லை.  அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரிலிருந்து புறப்பட்ட டெல்டா நிறுவன விமானம் ட்ரோண்டோ நகரில் தரையிறங்கும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விமானத்தில் 76 பயணிகள் இருந்துள்ளனர். 22 பேர் கனடாவைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் அமெரிக்க உள்பட பிற நாட்டைச் சேர்ந்தவர்கள். பயணிகள் 18 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 

இறங்கும் நேரம் என்பதால் அனைவரும் சீட் பெல்ட் அணிந்திருந்தனர். விமானத்திலிருந்து வெளிவந்த பயணி ஒருவர் வவ்வால் போல் தொங்கிக் கொண்டிருந்தோம். எப்படி பிழைத்தோம் என்பதே ஆச்சரியம் என்று கூறியுள்ளார். தலை குப்புற கவிழ்ந்துள்ள இந்த விமானத்தின் வீடியோ சமூகத்தளங்களில் வைரலாகி வருகிறது.


 

From around the web