அமேசான் காட்டிற்குள் விமான விபத்து.. 100 ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை.. 17 நாட்களுக்கு பிறகு கைகுழந்தை, 3 சிறுவர்கள் மீட்பு!!

 
crash

கொலம்பிய நாட்டில் அமேசான் காடுகளில் விழுந்து நொறுங்கிய விமானத்தில் பெற்றோர் உயிரிழந்த நிலையில் கைக்குழந்தை உள்பட 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள ஒரு மிகபெரிய மழைக்காடு அமேசான். இந்த காடு பிரேசில், கொலம்பியா, பெரு, வெனிசுலா, ஈக்வெடார், கயானா, பொலிவியா, சுரிநாம், பிரெஞ்சு கயானா உள்ளிட்ட நாடுகளில் பரந்து விரிந்துள்ளது. இந்த நிலையில், கொலம்பியா நாட்டின் அமேசான் வனப்பகுதியில் இருந்து தம்பதி தனது 4 குழந்தைகளுடன் விமானத்தில் சன் ஜொஷி டி கவ்ரி நகருக்கு கடந்த 1-ம் தேதி சென்றுள்ளனர். இதில், 11 மாதங்களேயான கைக்குழந்தையும் அடக்கம். 

அமேசான் அடவனப்பகுதியில் சென்றபோது விமானம் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி, தம்பதி என 3 பேர் உயிரிழந்தனர். ஆனால் அதிஷ்டவமாக 13 வயது, 9 வயது, 4 வயது 11 மாத கைக்குழந்தை உள்பட 4 பேர் இந்த விபத்தில் உயிர் பிழைத்தனர். இவர்கள் அனைவரும் அர்ந்த வனப்பகுதிக்குள் சிக்கிக்கொண்டனர். 

Amazon

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், மீட்புக் குழுவினருடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தை கண்டுபிடித்தனர். அங்கு விமானி, தம்பதியர் என 3 பேரின் உடல்களை கைப்பற்றினார். ஆனால், குழந்தைகளின் நிலை என்ன? என தெரியாததால் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

தேடுதலின் போது குழந்தைகள் உயிருடன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, குழந்தைகளை தேடும் பணியில் 100 ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டனர். மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டன. இந்நிலையில், 17 நாட்கள் தீவிர தேடுதலுக்கு பின் பச்சிளம் குழந்தை, 3 குழந்தைகளை இன்று உயிருடன் மீட்கப்பட்டனர்.

Amazon

இது குறித்து கொலம்பிய அதிபர் கஸ்டாவோ பெட்ரோ, ”ராணுவ வீரர்கள் கடுமையான தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். குழந்தைகள் கிடைத்தது தேசத்திற்கே மகிழ்ச்சியான செய்தி” என்று ட்வீட் செய்திருந்தார்.

From around the web