கடித்துக் குதறிய செல்லப்பிராணிகள்.. மருத்துவமனையில் பரிதாப நிலையில் இளம் பெண்!!

 
Australia

ஆஸ்திரேலியாவில் இளம்பெண் ஒருவர் தனது செல்லப்பிராணிகளினால் தாக்குதலுக்கு உள்ளாகி, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்தவர் நிகிதா பில். 31 வயதான இவர் ராட்வைலர் இனத்தைச் சேர்ந்த நான்கு நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகிறார். அவற்றுக்கு ஹார்லெம், ஃபோர், செவென் மற்றும் பிராங்க்ஸ் என பெயரிட்டு வளர்த்து வந்துள்ளார். 

Australia

இந்த நிலையில் கடந்த 16-ம் தேதி நிகிதா தனது நாய்களால் தாக்கப்பட்டார். இதில் அவரது கைகள் மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்ததனர். 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், நிகிதா மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நிகிதாவிற்கு 5 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளபட்டது. அன்றைய தினம் ஒரு நாய்க்கு அவர் பல் துலக்கிவிடாததால், கோரைன் பாக்டீரியா தொற்று அவருக்கு ஏற்பட்டது.

Australia

இதனால் அவருக்கு தீவிரமான சிக்கல்கள் உருவாகியிருப்பதாக தெரிவித்த குடும்பத்தினர், நிகிதா ஒரு போராளி அவர் மீண்டு வருவார் என கூறியுள்ளனர். இதற்கிடையில், பிராங்க்ஸ் நாயை டெஸர் முறையில் மருத்துவர் பிடிக்கும் முயற்சி தோல்வியுற்றதால், போலீசார் அதனை சுட வேண்டிய நிலை ஏற்பட்டது. நாய்கள் தங்கள் உரிமையாளரான நிகிதாவை தாக்க தூண்டியது எது என்பது தெளிவாக தெரியவில்லை.

From around the web