இணையத்தில் விபரீத சவால்.. முயற்சி செய்த ஆஸ்திரேலியா 13 வயது சிறுமி பலி!!

 
Australia

ஆஸ்திரேலியாவில் வினோதமான சவாலில் பங்கெடுத்த 13 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய இணையவாசிகல் அமைவரும் மற்றவருக்கு Challenge விடுவதையே பெரிய பொழுதுபோக்காக வைத்துள்ளனர். தங்களுக்கு பிடித்த அல்லது அபிமான விளையாட்டுகளை ஊடகங்களில் சவாலாக பதிவிட்டு அந்த வீடியோக்களை வைரலாக்கி வருகின்றனர். 

ஆஸ்திரேலியாவில் இத்தகைய வினோதமான சவால் சமூக வலைதளத்தில் வலம் வந்தது. அதாவது, நாம் பயன்படுத்துகின்ற வாசனை திரவியத்தை முழு மூச்சாக இழுத்து நுகர்ந்து பார்ப்பது அல்லது மூக்கில் வைத்து ஸ்பிரே செய்யும் வகையில் அந்த சவால் இருந்ததாம். Chroming என்ற பெயரில் இந்த டிரெண்ட் பரவி வந்தது. நறுமன பொருள் மட்டுமல்லாமல் சிலர் ஆபத்து மிகுந்த ரசாயனங்களையும் நுகர்ந்து காண்பித்து சவால் விட்டனர்.

Australia

இதைப் பார்த்து, ஆஸ்திரேலியாவை சேர்ந்த 13 வயது சிறுமி எஸ்ரா ஹேனஸ் சவாலில் பங்கெடுத்தார். வாசனை திரவியத்தை நேரடியாக மூக்கில் வைத்து இந்தச் சிறுமி ஸ்பிரே செய்ததாகத் தெரிகிறது. இதனால் திடீரென்று ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிறுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டதுடன், மீள முடியாத அளவுக்கு மூளையின் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டன.

இதனால் பதறிப்போன சிறுமியின் பெற்றோரும், உறவினர்களும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் 8 நாட்களுக்கும் மேலாக சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

வீடியோ மூலமாக கிடைக்கின்ற புகழ் வெளிச்சத்திற்காகவும், நம்மால் வினோதமான சவால்களை செய்ய முடியும் என்று நிரூபிக்கும் நோக்கில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் மருந்து பொருள்களையும் கூட இதுபோல திடீரென்று மூக்கில் ஸ்பிரே செய்கிறார்களாம்.

Dead-body

ஆனால், இது மிகவும் ஆபத்தான செயல் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். மூளை, உடல் உறுப்புகள், எலும்பு மஜ்ஜை போன்றவற்றில் இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கின்றனர். எண்ணற்ற சிறுவர், சிறுமியர்கள் இந்த சவாலில் ஈடுபடுகின்றனர் என்றாலும், இது யாரை தாக்கும், யாரை தாக்கது என்று யூகிக்க இயலாது என்று வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

சிறுமியின் மரணத்தை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் குழந்தைகள் பார்க்கக் கூடிய விஷயங்கள் குறித்து மிகுந்த கட்டுப்பாடுகளை உலகளாவிய அளவில் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

From around the web