ஜிம்பாவேயில் வாழும் தீக்கோழி மனிதர்கள்.. ஆச்சரிய தகவல்கள்!

 
Vadoma

ஜிம்பாப்வே நாட்டில் வடோமா பழங்குடியினரின் ஒவ்வொரு நான்காவது குழந்தைக்கும் 2 விரல்கள் மட்டுமே உள்ளதாக நம்பப்படுகிறது.

மேற்கு ஜிம்பாப்வே எல்லைக்குள் வடோமா என்ற பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களை தீக்கோழி மனிதர்கள் (ostrich people) என்றே எல்லாரும் அழைக்கிறார்கள். அதற்கு காரணம் இந்த மக்கள் எல்லாருக்குமே காலில் இரண்டே இரண்டு விரல்கள் தான் இருக்கிறது. இவர்கள் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே வாழ்கிறார்கள் இந்த மக்கள் எல்லாருக்குமே இரண்டு விரல்கள் கொண்ட கால் தான் இருக்கிறது.

இது ஒரு அரிய மரபணு நிலை பாதிக்கப்படும் நோயாகும். இந்த மரபணு மாற்றம் லோப்ஸ்டர் க்ளா சிண்ட்ரோம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பிரச்னையால் இந்த பழங்குடியினத்தில் பிறக்கும் குழந்தைகள் பிறக்கும் போதே, பாதங்களில் முழுமையாக ஐந்து விரல்களும் இருப்பதில்லை. இரண்டு அல்லது மூன்று விரல்கள் தான் இருக்கின்றன. அந்த விரல்களும் உள்நோக்கி வளைந்து காணப்படுகிறது. வடோமா பழங்குடியினரின் ஒவ்வொரு நான்காவது குழந்தைக்கும் இந்த பிரச்சனை இருப்பதாக நம்பப்படுகிறது.

Vadoma

இவர்களால் ஷூ மற்றும் செருப்பை பயன்படுத்த முடியாது. காலில் வினோதமான வடிவில் இரண்டே இரண்டு விரல்கள் மட்டும் இருப்பதே இதற்கு காரணம். இப்படியான விரல்கள் இருப்பதால் இவர்களால் வேகமாக ஓட முடியாது. சிலருக்கு நடப்பதும் சிரமமாகவே இருக்கிறது. ஆனால் இந்த கால்களின் உதவியுடன் சாதரண மனிதர்களை விட மிக வேகமாக மரம் ஏறுகிறார்கள்.

இவர்களுடைய முன்னோர்கள் விண்வெளியில் இருந்தவர்கள் என்றும் பூமியில் இருக்கக்கூடிய பெண்ணிடம் உறவு கொண்டு காலங்காலமாக பூமியில் அடுத்தடுத்த சந்ததியினருடன் பூமியில் வாழ்வதாக இவர்கள் நம்புகிறார்கள். பெரும்பாலும் இவர்கள் மக்கள் கூட்டத்தை விட்டு தள்ளியே இருக்கிறார்கள். இந்த மக்கள் யாரும் பிறருடன்,பிற இன மக்களுடன் சேர்ந்து பழகுவதில்லை.

Vadoma

இந்தப் பழங்குடியின மக்கள் வேறு சமூகத்தில் திருமணம் செய்துகொள்வதை விரும்புவதில்லை. ஏனெனில் இரட்டை விரல்களுடன் பிறப்பதை அவர்கள் வரமாக நினைக்கிறார்கள். அவர்கள் வேறு இன மக்களுடன் கலந்தால் தங்கள் இரட்டை விரல் வரத்தை இழந்து விடுவதாக அஞ்சுகிறார்கள்.

From around the web