இஸ்ரேலில் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் பலி.. பயங்கரவாத தாக்குதலா?

 
Israel

இஸ்ரேலில் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ஹலேஹி தெருவில் குண்டுவெடிப்பு ஒன்று நடந்தது. இந்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

dead-body

இதுகுறித்து மாவட்ட தளபதி பெரிட்ஜ் அமர் கூறும்போது, உயிரிழந்த நபர் வெடிகுண்டு ஒன்றை சுமந்து சென்றிருக்க கூடும் என நம்பப்படுகிறது. குண்டுவெடிப்பில் பலியான நபர் யாரென போலீசார் இன்னும் அடையாளம் காணவில்லை என்று கூறியுள்ளார்.

Israel

இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதலா? என முழு விசாரணைக்கு முன்பே கூற முடியாது. எனினும், வெடிகுண்டால் இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது என அமர் உறுதிப்படுத்தி உள்ளார். அந்நபரை அடையாளம் காண்பது மிக முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

From around the web