உடல் பருமன் டு பாடி பில்டிங்.. பிரேசிலின் 19 வயதே ஆன பாடி பில்டர் மாரடைப்பால் மரணம்..!

 
Brazil

பிரேசிலை சேர்ந்த 19 வயது பாடி பில்டர் மத்தேயூஸ் பாவ்லக் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் அமெரிக்காவின் பிரேசில் நாட்டை சேர்ந்த வளர்ந்து வரும் பாடி பில்டிங் நட்சத்திரமான இருந்து வந்த மத்தேயூஸ் பாவ்லக் (19). இவர், பயிற்சியின் மூலம் தேர்ந்த பாடி பில்டருக்கான உடல் வாகுவை கொண்டிருப்பதைக் கண்டு அனைவரும் ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருந்தனர். 

Steroids

ஐந்து வருடங்களுக்கு முன்னர் நடந்த உடல்  பருமன் கொண்டவர்கள் எடையை குறைக்கும் போட்டியில் பங்கெடுத்த மத்தேயூஸ் அதிலிருந்த்து தனது பாடி  பில்டிங் ஆர்வத்தை பெற்றார்.

பிரேசிலில் நடந்த பல்வேறு பாடி பில்டிங் போட்டிகளில் பங்கேற்று புகழை சம்பாதித்த மத்தேயூஸ் பிரேசிலின் சாண்டா காத்ரீனா மாகாணத்தில் உள்ள தனது வீட்டில் வைத்து கடந்த ஞாயிறு மதியம் மாரடைப்பு  ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். 

dead-body

மத்தேயூசின் மரணம், உடலை அசாதாரணமாக மாற்ற பாடி பில்டிங் பயிற்சியில் பயன்படுத்தப்படும் அனபாலிக் ஸ்டெராய்ட்களின் [ஊக்கமருந்துகளின்] பாதுகாப்புத் தன்மை மீதான சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மத்தேயூசும் இவ்வளவு இளம்வயதில் அவரின் அசாதாரண உடல்வாகைப் பெற இதுபோன்ற ஸ்டெராய்ட்களை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. 

From around the web