2024-ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு

 
Nobel

2024-ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1901-ம் ஆண்டு முதன்முதலில் 5 பிரிவுகளின் கீழ் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து 1969-ம் ஆண்டு ரிக்ஸ் வங்கி நன்கொடையாக அளித்த பணத்தைக் கொண்டு நோபல் பரிசு பட்டியலில் பொருளாதாரத்துக்கான பரிசு சேர்க்கப்பட்டது. ஆண்டுக்கு ஒருமுறை 6 பிரிவுகளின் கீழ் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வே தலைநகர் ஒஸ்லோவில் அறிவிக்கப்படும். 

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் 7-ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. முதல் நாளில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இயற்பியல், வேதியியல், இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, அமைதிக்கான நோபல் பரிசு கடந்த 12-ம் தேதி அறிவக்கப்பட்டது.

Nobel

இந்நிலையிலொ இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்படி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த டாரன் அசெமேக்லு, ஜேம்ஸ் ராபின்சன், சைமன் ஜான்சன் ஆகியோருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டை வடிவமைப்பதில் அமைப்புகளின் பங்கு பற்றிய ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டுள்ளது. பலவீனமான சட்டம் மற்றும் சுரண்டல் அதிகம் கொண்ட நாடுகள் பெரியளவில் வளர்ச்சியை அடையாது என்பதை அவர்களின் ஆய்வு நிரூபித்துள்ளது.


ஒரு அமைப்பு எப்படி உருவாகின்றன.. அவை எப்படி ஒரு நாட்டின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு காரணமாக இருக்கிறது, நிலையான வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் ஆகிவை குறித்து இவர்கள் விரிவான ஆய்வுகளை செய்துள்ளனர்.e

From around the web