2023-ம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு!
2023-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1901-ம் ஆண்டு முதன்முதலில் 5 பிரிவுகளின் கீழ் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து 1969-ம் ஆண்டு ரிக்ஸ் வங்கி நன்கொடையாக அளித்த பணத்தைக் கொண்டு நோபல் பரிசு பட்டியலில் பொருளாதாரத்துக்கான பரிசு சேர்க்கப்பட்டது. ஆண்டுக்கு ஒருமுறை 6 பிரிவுகளின் கீழ் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வே தலைநகர் ஒஸ்லோவில் அறிவிக்கப்படும். அந்த வகையில், மருத்துவம் மற்றும் இயற்பியல் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில், 2023-ம் ஆண்டுக்கான வேதியல் துறையில் சாதித்த 3 பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மவுங்கி பவெண்டி, லூயிஸ் புரூஸ், அலெக்சி எகிமோவ் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. குவாண்டம் புள்ளிகளின் கண்டுபிடிப்பு மற்றும் தொகுப்புக்காக இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாக நோபல் சபை தெரிவித்துள்ளது.
BREAKING NEWS
— The Nobel Prize (@NobelPrize) October 4, 2023
The Royal Swedish Academy of Sciences has decided to award the 2023 #NobelPrize in Chemistry to Moungi G. Bawendi, Louis E. Brus and Alexei I. Ekimov “for the discovery and synthesis of quantum dots.” pic.twitter.com/qJCXc72Dj8
இந்தாண்டுக்கான இலக்கியத்துக்கான விருது அக். 5-ம் தேதியும் அமைதிக்கான விருது அக். 6-ம் தேதியும் மற்றும் பொருளாதாரத்துக்கான விருது 9-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.