2023-ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

 
Literature Noble prize

2023-ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு நார்வே எழுத்தாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

1901-ம் ஆண்டு முதன்முதலில் 5 பிரிவுகளின் கீழ் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து 1969-ம் ஆண்டு ரிக்ஸ் வங்கி நன்கொடையாக அளித்த பணத்தைக் கொண்டு நோபல் பரிசு பட்டியலில் பொருளாதாரத்துக்கான பரிசு சேர்க்கப்பட்டது. ஆண்டுக்கு ஒருமுறை 6 பிரிவுகளின் கீழ் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

Jon Fosse

அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் கடந்த 2-ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வே தலைநகர் ஒஸ்லோவில் அறிவிக்கப்படும். அந்த வகையில், மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியல் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், இலக்கிய துறைக்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, 2023-ம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு நார்வே எழுத்தாளர் ஜான் போஸ் என்பவருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கவிதை, சிறுகதைகள், குழந்தை இலக்கியம், கட்டுரைகள், நாடக வசனம் என பன்முக இலக்கிய தன்மை வாய்ந்தவர் ஜான் போஸ் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்தாண்டு அமைதிக்கான விருது அக். 6-ம் தேதியும் மற்றும் பொருளாதாரத்துக்கான விருது 9-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.

From around the web