துப்பாக்கி சூட்டில் நேபாள மாணவி பலி.. இந்திய வம்சாவளி நபர் கைது.. அமெரிக்காவில் பரபரப்பு

 
Houston

அமெரிக்காவில் நேபாள் நாட்டை சேர்ந்த பெண்ணை இந்திய வம்சாவளி நபர் ஒருவர் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் நகரில் குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தவர் முனா பாண்டே (21). நேபாள நாட்டை சேர்ந்த இவர், இங்கு உள்ள கல்லூரியில் படித்து வந்து இருக்கிறார். இந்நிலையில், அந்த மாணவி துப்பாக்கியால் பலமுறை சுடப்பட்டு குண்டு காயங்களால் குடியிருப்பில் கிடந்துள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  அவர்கள் வந்தபோது, மாணவி முனா உயிரிழந்து விட்டார்.

Texas

இதுபற்றி சிசிடிவி காட்சி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தபோது, சம்பவ பகுதியில் இருந்து பாபி சின்ஹா ஷா (52) என்பவர் தப்பி சென்றது தெரிய வந்தது. அவரை போக்குவரத்து நிறுத்தத்தில் வைத்து போலீசார் கைது செய்து உள்ளனர். முதல்கட்ட விசாரணையில் அவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.

arrest

இந்த துப்பாக்கி சூடு தாக்குதலுக்கான காரணம், உள்நோக்கம் போன்றவை பற்றிய விவரங்கள் தெரிய வரவில்லை. அதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன்பின்னரே நேபாளத்தில் கல்லூரி மாணவி கொல்லப்பட்டதற்கான காரணம் தெரிய வரும். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web