பெண்கள், மனித உரிமைக்காக போராடிய ஆர்வலர் நர்கஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு!
2023-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஈரானை சேர்ந்த நர்கீஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
1901-ம் ஆண்டு முதன்முதலில் 5 பிரிவுகளின் கீழ் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து 1969-ம் ஆண்டு ரிக்ஸ் வங்கி நன்கொடையாக அளித்த பணத்தைக் கொண்டு நோபல் பரிசு பட்டியலில் பொருளாதாரத்துக்கான பரிசு சேர்க்கப்பட்டது. ஆண்டுக்கு ஒருமுறை 6 பிரிவுகளின் கீழ் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் கடந்த 2-ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வே தலைநகர் ஒஸ்லோவில் அறிவிக்கப்படும். ஒரு தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் இந்திய மதிப்பில் ரூ.7.33 கோடி ரொக்கம் ஆகியவை நோபல் பரிசாக வழங்கப்படுகின்றன. அந்த வகையில், மருத்துவம், இயற்பியல், வேதியல் மற்றும் அமைதி ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு நார்வே தலைநகர் ஓஸ்லோவில் அமைதிக்கான நோபல் பரிசை தேர்வு குழு அறிவித்தது. அதன்படி, 2023-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கிஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடி வரும் நர்கீஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஈரானில் பெண்களுக்காக போராடி பலமுறை சிறை சென்ற நர்கீஸ் முகமதி தற்போதும் சிறையில்தான் உள்ளார். ஈரானில் மகளிர் உரிமைக்காக மட்டுமின்றி மனித உரிமைகளுக்காகவும் நர்கீஸ் முகமதி போராடி வருகிறார்.
BREAKING NEWS
— The Nobel Prize (@NobelPrize) October 6, 2023
The Norwegian Nobel Committee has decided to award the 2023 #NobelPeacePrize to Narges Mohammadi for her fight against the oppression of women in Iran and her fight to promote human rights and freedom for all.#NobelPrize pic.twitter.com/2fyzoYkHyf
பெண்கள் உரிமைக்காகவும் மனித உரிமைகளுக்காவும் போராடிய நர்கீஸ் முகமதியை ஈரான் அரசு 13 முறை கைது செய்துள்ளது. 31 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு தற்போதும் நர்கீஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெண்கள் உரிமைகளுக்காக போராடிய நர்கீஸ் முகமதிக்கு ஈரான் அரசு இதுவரை 154 முறை சவுக்கு அடி கொடுத்துள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள இந்த நிலையிலும் நர்கீஸ் முகமதி சிறையில்தான் உள்ளார்.
மகளிர் உரிமைக்காக போராடியதற்காக நர்கீஸ் முகமதிக்கு 5 முறை சிறை தண்டனை விதித்துள்ளது. பெண்கள், வாழ்க்கை, சுதந்திரம் என்ற தலைப்பில் பெரும் போராட்டம் வெடித்த ஈரானில் முக்கிய பங்குவகித்தவர் நர்கீஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை, மருத்துவம், இயற்பியல், வேதியியல் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.