மைதானத்தில் கிடந்த மர்மப் பொருள்.. சிறுவர்கள் உள்பட 30 பேர் உடல் சிதறி பலி... சோமாலியாவில் சோகம்..!

 
Somalia

சோமாலியாவில் உள்ள கால்பந்து மைதானத்தில் குண்டு வெடித்து 30 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் தெற்கு பகுதியான ஷாபெல்லி பகுதியில் கால்பந்து மைதானம் உள்ளது. இந்த கால்பந்து மைதானத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.  அப்போது, மைதானத்தில் கிடந்த மர்ம பொருள் ஒன்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. 

Blast

இதில், சிறுவர்கள் உட்பட சுமார் 30 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், சுமார் 50 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், கடந்த காலத்தில் உள்நாட்டு போரின் போது வீசப்பட்டு மண்ணில் புதைந்த குண்டு, தற்போது வெடித்தது தெரியவந்துள்ளது. 

இதனிடையே சோமாலியா தலைநகர் மொகதிசுவில் உணவகம் ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 3 பாதுகாப்பு வீரர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். உணவகத்தில் இருந்த சுமார் 80 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பான அல் ஷபாப் பொறுப்பேற்றுள்ளது. தாக்குதல் நடந்த இடத்தில் ராணுவம் மற்றும் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Somalia

சோமாலியாவில் செயல்பட்டு வரும் அல்-ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு அரசை கவிழ்க்க முயற்சி செய்து வருகிறது. அல்கொய்தாவுடன் தொடர்புடைய இந்த பயங்கரவாத அமைப்பு, சோமாலியா மக்கள் மற்றும் ராணுவத்தை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

From around the web