மனைவியின் கடைசி ஆசை.. முன்னாள் காதலனுடன் செக்ஸ்.. பரிதவித்த கணவன்!

 
Sex

இன்னும் 9 மாதங்களில் இறக்கப்போகும் தன் மனைவியின் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றி வரும் கணவனிடம் அவரது மனைவி விவகாரமான தனது ஆசையை கூறியிருக்கிறார்.

பத்து ஆண்டுகளாக சந்தோஷமாக வாழ்ந்து வந்த தம்பதியரில் மனைவிக்கு தீராத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் இன்னும் சில மாதங்களில் இறந்து விடுவார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கணவர், மனைவியின் விருப்பத்தை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என முடிவு செய்கிறார். 

இந்த நிலையில் மனைவி கேட்ட ஒரு விசயத்தை நிறைவேற்றுவதா? வேண்டாமா என முடிவெடுக்க முடியாமல் அந்தக் கணவர் திண்டாடி வருகிறார். தனது மனைவி விடுத்த கோரிக்கையால் அந்த தம்பதியரின் வாழ்க்கையே தலைகீழாக புரண்டு போய் விட்டது.

Illness

அண்மையில் ஒரு இளைஞர் தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக ரெடிட் என்ற சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், 9 மாதங்கள் மட்டுமே வாழ்வார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாகவும், இதனால் தனது மனைவியின் கடைசி நாட்களில் அவரை மகிழ்ச்சியாக வைத்திருக்க தான் முயற்சிப்பதாகவும் அந்த இளைஞர் குறிப்பிட்டுள்ளார். இதனால் தனது மனைவியின் அனைத்து விருப்பங்களையும் தான் நிறைவேற்றி வருவதாகவும், ஆனால் அவர் கேட்ட ஒரு கோரிக்கை தன்னை நிலைகுலைய வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனது முன்னாள் காதலனுடன் கடைசியாக உடலுறவு கொள்ள வேண்டும் என்பதே தனது மனைவியின் கடைசி ஆசை என அந்த இளைஞர் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டுள்ளார். எனது மனைவி தனது முன்னாள் காதலன் தனது வாழ்க்கையில் பாலியல் ரீதியாக தனக்கு அதிக இன்பத்தை கொடுத்ததாக நினைக்கிறாள் என விரக்தியுடன் அந்த இளைஞர் குறிப்பிட்டுள்ளார். 

Reddit

மனைவியின் இத்தகைய ஆசையை ஏற்றுக்கொள்ள முடியாத அந்த இளைஞர் “என் மனைவிக்கு நான் சரி என்று சொல்ல வேண்டிய நிலையில் நான் இருப்பதாகவே நான் உணர்கிறேன். ஏனென்றால் அவள் இறந்து கொண்டிருக்கிறாள், அதே சமயம், என் மனைவி தன் முன்னாள் காதலனுடன் உடலுறவை விரும்புகிறாள் , அதுவே அவள் இறப்பதற்கு முன் அவளுடைய கடைசி ஆசையாக இருந்தது என்பதை நினைத்து வேதனை அடைகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பெண் யார், அவளுடைய கணவன் யார் உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் இளைஞனின் இந்த பதிவு இப்போது வைரலாகி வருகிறது.

From around the web