ஒரே மாதத்தில் 35 கிலோ உடல் எடையை அதிகரித்த மாடல் அழகி.. காதலனால் நேர்ந்த சோகம்!

 
China

சீனாவில் காதலனுக்காக ஒரு மாதத்தில் சுமார் 35 கிலோ எடையை அதிகரித்த மாடல் பெண்ணுக்கு நேர்ந்த சோக சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தெற்கு சீனாவில் உள்ள ஹுனான் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜெங். மாடலாக பணிபுரிந்து வந்த இவர் உடல் எடையை 50 கிலோவிற்கு மேல் இல்லாமல் கட்டுக்கோப்பாக வைத்து வந்துள்ளார். இந்த சமயத்தில்தான் தனது காதலனை முதல் முறையாக சந்தித்துள்ளார். இருவருக்குள்ளும் உடனே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என்று சொன்ன போதுதான் அந்தக் காதலன் ஒரு குண்டை தூக்கி போட்டான்.

அதாவது, நீ ரொம்பவும் ஒல்லியாக இருக்கிறாய்; கொஞ்சமாவது குண்டாக இருந்தால் மட்டுமே நான் உன்னை திருமணம் செய்து கொள்வேன் என அவர் கூறியுள்ளான். தனது காதலனுக்கு பிடித்த மாதிரி இருக்க வேண்டும் என்பதற்காக அந்தப் பெண் தனது உடல் எடையை அதிகரிக்க முடிவு செய்தார். காதலிக்கும் போது அறிவு வேலை செய்யாது என்பதை நிரூபிக்கும் வகையில், ஒரே மாதத்தில் தனது காதலனுக்காக 35 கிலோ எடையை அதிகரித்தார்.

china

இனி நம்மை திருமணம் செய்து கொள்வார் என ஆசையோடு காத்திருந்த பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இவரது புதிய தோற்றதை பார்த்த காதலன், உடனே தனது காதலை முறித்துக்கொண்டதோடு, இனி நாம் இருவரும் பிரிந்துவிடுவோம் எனக் கூறியுள்ளான். இந்த திடீர் மாற்றத்தை அந்த பெண்ணால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. உனக்காக தானே இதையெல்லாம் செய்தேன் என அவர் கூறினாலும், காதலனின் மனம் மாறவில்லை. 

இதோடு அவர் சோகம் முடியவில்லை. இன்னொரு அதிர்ச்சியும் காத்திருந்தது. திடீர் உடல் எடை கூடியதன் காரணமாக, வேலையிலிருந்தும் நீக்கப்பட்டார். இப்போது தனது காதலனை இழந்ததோடு மட்டுமல்லாமல் தனது வாழ்வாதாரமாக இருந்து வந்த வேலையையும் பறிகொடுத்துவிட்டு நிற்கிறார்.

china

காதலனுக்காக உடல் எடையை அதிகரித்த அவர், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தனது உடல் எடையை குறைத்து வருகிறார். தனக்கு நேர்ந்த இந்த சம்பவத்தை அவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். காதலுக்கான அவசர முடிவு எடுத்த பெண்ணுக்கு சோசியல் மீடியாவில் ஆதரவு பெருகி வருகிறது. மேலும், உடல் எடை அதிகரித்தத்திற்காக மாடலிங் வேலையில் தூக்கியத்தற்கு நெட்சன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

From around the web