துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட ஈகுவடார் அழகி.. இன்ஸ்டாவில் போட்ட ஒற்றை பதிவால் நேர்ந்த சோகம் 

 
Ecuador

ஈகுவடாரில் அழகிப்போட்டியில் கலந்து கொண்ட பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் அமெரிக்க நாடான ஈகுவடாரை சேர்ந்தவர் லாண்டி பர்ராகா காய்புரோ (23). இவர், 2022-ம் ஆண்டு நடந்த மிஸ் ஈகுவடார் அழகி போட்டியில் பங்கேற்றவர். இவருக்கும் போதை பொருள் கடத்தல்காரரான லியாண்டிரோ நாரிரோ என்பவருக்கும் தொடர்பு உள்ளது என நம்பப்படுகிறது. ஒரு வருடத்திற்கு முன் சிறையில் நடந்த கலவரத்தில் நாரிரோ பலியானார்.

ஊழல் தொடர்புடைய விசாரணை ஒன்றில் காய்புரோவின் பெயரும் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் காய்புரோ, உணவு விடுதி ஒன்றில் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி ஆக்டோபஸ் செவிசே என்ற பெயரிலான உணவை வாங்கி மதிய உணவு இடைவேளையின் போது சாப்பிட தயாரானார்.

அப்போது, தன்னுடைய இருப்பிடம் பற்றிய விவரத்துடன் அதனை இன்ஸ்டாகிராமில் பதிவாக வெளியிட்டார். அதுவே அவருக்கு வினையாகி போனது. இதனை பார்த்து, அந்த உணவு விடுதிக்கு 2 மர்ம நபர்கள் ஆயுதத்துடன் வந்தனர்.

இதுகுறித்த சிசிடிவி காட்சியில், நபர் ஒருவருடன் காய்புரோ பேசி கொண்டிருக்கிறார். அப்போது, உணவு விடுதிக்கு வந்த சேர்ந்த ஆயுதமேந்திய 2 பேரையும் அவர் பார்க்கிறார். அவர்கள் இருவரில் ஒருவர் வாசலிலேயே நின்று கொள்ள, 2-வது நபர் துப்பாக்கியுடன் ஓடி சென்று காய்புரோ மற்றும் அவருடன் பேசி கொண்டிருந்த நபர் என இருவரையும் சுட்டுள்ளார்.

Ecuador

இதன்பின்பு, 2 பேரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றனர். இதில், 3 முறை குண்டு பாய்ந்ததில் காய்புரோ படுகாயமடைந்து உயிரிழந்து விட்டார். நாரிரோவின் மனைவி இந்த படுகொலையை அரங்கேற்றியிருக்க கூடும் என கூறப்படுகிறது.

நாரிரோவின் மொபைல் போனில் காய்புரோவின் புகைப்படங்கள் இருந்தன. ஆடம்பர கார்கள் உள்ளிட்ட பரிசு பொருட்களை காய்புரோவுக்கு அவர் அளித்த புகைப்படங்களும் சான்றுகளாக கிடைத்தன. வழக்கு விசாரணையின்போது அழகு ராணி காய்புரோவுடனான தொடர்பு பற்றி வெளியிட வேண்டாம் என நாரிரோ, தன்னுடைய கணக்காளரிடம் கெஞ்சி கேட்டு கொண்டார். இந்த விவரம் அவருடைய மனைவிக்கு தெரிந்து விட்டால் ஒரே கலவரம் ஆகி விடும் என பயந்து போயிருக்கிறார் என வழக்கறிஞர்க


ள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

From around the web