விமானத்தில் 14 வயது சிறுமி முன் சுய இன்பம்.. இந்திய வம்சாவளி மருத்துவர் கைது!

 
Sudipta Mohanty

விமானத்தில் பயணம் செய்த 14 வயது சிறுமிக்கு அருகில் அமர்ந்து, சுயஇன்பம் கொண்டதாக இந்திய அமெரிக்க மருத்துவர் ஒருவரை கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் 27-ம் தேதி அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள ஹொனலுலுவில் இருந்து பாஸ்டனுக்கு ஹவாய் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சென்று கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் மசாசூசெட்ஸின் கேம்பிரிட்ஜில் வசிக்கும் இந்திய அமெரிக்க டாக்டர் சுதிப்தா மொஹந்தி (33) பயணம் செய்து உள்ளார். அவரது இருக்கை அருகே 14 வயது சிறுமி ஒருவரும் பயணம் செய்து உள்ளார். அந்த சிறுமியின் தாத்தாவும் பாட்டியும் அதே விமானத்தில் வேறு இருக்கையில் அமர்ந்திருந்தனர்.

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, மொஹந்தியின் நடவடிக்கைகள் மாறத் தொடங்கியிருக்கின்றன. அவர் போர்வையை எடுத்து கழுத்து வரை போர்த்தியிருக்கிறார். போர்வையால் மூடிய நிலையில் திடீரென மொஹந்தி சுய இன்பத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளார். அவரது கால்கள் மேலேயும் கீழேயும் ஏறி இறங்குவதை சிறுமி பார்த்திருக்கிறார்.

Plane

ஒரு கட்டத்தில் மொஹந்தி போர்த்தியிருந்து போர்வை கீழே விழுந்துள்ளது. அப்போது பேண்ட் அவிழ்க்கப்பட்ட நிலையில் மொஹந்தி அமர்ந்திருப்பதைக் கண்ட சிறுமி அதிர்ச்சி அடைந்திருக்கிறார். சிறுமி உடனே எழுந்து காலியாக இருந்த வேறு ஒரு இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டார்.

விமானத்தை விட்டு இறங்கியதும் இந்த சம்பவம் குறித்து சிறுமி தனது தாத்தா பாட்டியிடம் கூறியிருக்கிறார். உடனடியாக இந்த சம்பவம் குறித்து காவல்துறையினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. விசாரணை மேற்கொண்ட எஃப்பிஐ அதிகாரிகள் மருத்துவர் சுதிப்தா மொஹந்தியை கைது செய்தனர். பின்னர் பாஸ்டனில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் முதலில் ஆஜரானதைத் தொடர்ந்து நிபந்தனைகளின் அடிப்படையில் டாக்டர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து அமெரிக்க அரசு வழக்கறிஞர் ஜேசுவா லெவி கூறுகையில், அநாகரீகமான செயல்களை பொதுவெளியில் அதுவும் குறிப்பாக குழந்தைகள் முன்னிலையில் செய்வது கண்டிப்பாக தண்டனைக்குரிய குற்றம் என்று கூறினார்.


இது மிகவும் கண்டிக்கத்தக்க அவருவப்பான செயல் என்றும், விமானப் பயணங்களின் போது பாலியல் துன்புறுத்தல் அல்லது அத்துமீறல், விமாப் பணியாளர்களை துன்புறுத்தல், திருட்டு போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களை எஃப்பிஐ சும்மா விடாது என எச்சரித்திருக்கிறார் பாஸ்டன் நகர காவல் அதிகாரிகளுள் ஒருவரான கிறிஸ்டோபர் டிஸென்னா.

மொஹந்தி மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவரது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 90 நாட்கள் சிறைத்தண்டனையும், 5,000 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்படவும் வாய்ப்பிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

From around the web