கஜகஸ்தான் சுரங்கத்தில் பயங்கர தீ விபத்து.. 32 பேர் பரிதாப பலி!

 
Kazakhstan

கஜகஸ்தானில் எஃகுச் சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய ஆசியா நாடான கஜகஸ்தானின் காரகண்டா பகுதியில் நிலக்கரி சுரங்கங்கள் அதிகம் உள்ளன. அங்குள்ள கோஸ்டென்கோ சுரங்கத்தை ஆர்சிலர் மிட்டல் டெம்ரிடாவ் என்ற தனியார் நிறுவனம் குத்தகை எடுத்துள்ளது. இந்நிலையில், நேற்று கோஸ்டென்கோ நிலக்கரி சுரங்கத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது சுரங்கத்தில் 250-க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்துள்ளனர்.

Kazakhstan

மீத்தேன் வாயு கசிவால் இந்தத் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், 32 பேர் பலியானதாகவும், 14 பேர் மாயமாகி உள்ளனர். மேலும் 18 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 15 பேர் கார்பன் மோனாக்சைடு விஷத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பிராந்திய சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் சுரங்க நடவடிக்கைகளை தேசியமயமாக்கும் ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்ட அதே நாளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்திற்கு கஜகஸ்தான் அதிபர் காசிம் - ஜோமார்ட் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவத்திற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Kazakhstan

கஜகஸ்தானில் ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்தால் இயக்கப்படும் தளத்தில் கடந்த இரண்டு மாதங்களில் நடந்த இரண்டாவது மரண சம்பவம் இதுவாகும். ஓகஸ்ட் மாதத்தில், கரகண்டா சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web