ஸ்பெயின் இரவு விடுதியில் பயங்கர தீ விபத்து.. 7 பேர பலி.. பரபரப்பு வீடியோ!

ஸ்பெயினில் இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயினின் தென் கிழக்கு நகரமான முர்சியாவின் அட்டாலயா பகுதியில் இரவு விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியில் இன்று (அக். 1) அதிகாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த சுமார் 40 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயை அணைக்க போராடிய வீரர்களால், 4 மணிநேரம் கழித்து தான் கட்டிடத்திற்குள் நுழைய முடிந்தது.
எனினும், 4 பேரின் உடல்களை மீட்ட வீரர்கள் 40 நிமிடங்களுக்கு பின் இருவரைக் கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து மேலும் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டனர். இறுதியில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 8 பேர் காணாமல் போனதாகவும் அவசர சேவை பிரிவு தெரிவித்தது. அத்துடன் 22 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் காயமடைந்தது தெரிய வந்துள்ளது.
இதற்கிடையில் காணாமல் போன 8 பேரும் இரவு விடுதியில் பிறந்தநாள் கொண்டாடும் குழுவைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது. தீயணைப்பு வீரரக்ள் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என நம்பப்படுவதால் அவர்களை தேடி வருகின்றனர்.
💔At least six people have died in fire in nightclub in Murcia in southeast Spain.
— Volcaholic 🌋 (@volcaholic1) October 1, 2023
The fire started at Murcia's Teatre nightclub around 06:00 local time. The death toll may rise as authorities search for missing people who were in the club at the time. Four people have been… pic.twitter.com/8iPnBw8jHk
தற்போது வரை பரபரப்பாக இருக்கும் இந்த இரவு விடுதி தீப்பிடித்ததற்கான காரணம் தெரியவில்லை. நகர மேயர் ஜோஸ் பலேஸ்டா இந்த சோக சம்பவத்திற்கு பதிலளிக்கும் விதமாக மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்தார்.