இந்திய மாணவி படுகொலை... பிரேசில் இளைஞர் வெறிச்செயல்.. இங்கிலாந்தில் அதிர்ச்சி சம்பவம்!

 
Kotham

இங்கிலாந்தில் படித்து வந்த இந்திய மாணவி திருமணத்திற்கு தயாராகி வந்த நிலையில் அவரை பிரேசில் நாட்டை இளைஞர் படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த கொந்தம் தேஜஸ்வினி (27) என்பவர் எம்.எஸ் படிப்பு படித்து வந்தார். படிப்புடன் பகுதிநேரம் பணியாற்றி வந்த தேஜஸ்வினி கடந்த 3 ஆண்டுகளாக லண்டனில் வெம்ப்ளே பகுதியில் நீல்டு கிரசன்ட் இருந்து வருகிறார். அவர் தங்குமிடத்திற்கான வாடகையை சிலருடன் பகிர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவர் தங்கிருந்த அறையில் அவரை பிரேசில் நாட்டை சேர்ந்த இளைஞர் கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவம் செவ்வாயன்று இரவு நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட தேஜஸ்வினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Kotham

இந்த சம்பவம் தொடர்பாக பிரேசில் நாட்டை சேர்ந்த கெவின் அன்டோனியோ (23) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தாக்கியதில் தேஜஸ்வினி அறையில் இருந்த 28  வயதாகும் இன்னொரு பெண்ணும் காயம் அடைந்தார். இருப்பினும் அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கொந்தம் தேஜஸ்வினியின் பெற்றோர் கூறுகையில், “நடந்த சம்பவம் குறித்து எங்களுக்கு காலையில்தான் தெரியவந்தது. மருத்துவமனையில் எங்களது மகள் படுகாயத்துடன் அனுமதிக்கப்பட்டிருப்பதாக எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் அவர் ஐதராபாத்திற்கு வந்தார். அதற்கு அடுத்த மாதமே அவர் லண்டனுக்கு புறப்பட்டு சென்று விட்டார்.

KOtham

அவருக்காக திருமண ஏற்பாடுகளை செய்து வந்தோம். இந்த மே மாதமே அவர் ஐதராபத்திற்கு வருவதாக இருந்தது. விரைவில் வீடு திரும்பி, அவருக்கான மணமகனை முடிவு செய்யப்போவதாக கூறியிருந்தார். அதற்குள்ளாக இந்த சம்பவம் நடந்திருக்கிறது. எங்கள் மகளின் உடலை இந்தியா கொண்டுவருவதற்கு அரசு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

From around the web