93 வயதில் 5வது திருமணம்.. 67 வயது காதலியை மணம் முடித்த பிரபல தொழிலதிபர் ரூபர்ட் முர்டோக்!

 
Rupert Murdoch

93 வயதான ரூபர்ட் முர்டோக் தனது காதலி எலினா ஜுகோவாவுடனான திருமணம் கலிபோர்னியாவில் உள்ள தனது பங்களாவில் நிகழ்ந்ததாக ரூபர்ட் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பிரபல ‘நியூஸ் வேர்ல்ட் மீடியா’ அதிபர் ரூபர்ட் முர்டோக் (93). தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், பாக்ஸ் நியூஸ் உள்ளிட்ட அமெரிக்க செய்தி ஊடகங்களின் உரிமையாளர். ரூபர்ட் சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் 16 ஆயிரம் கோடி. அவருக்கு  மகன், மகள்கள்  என 6 பேர் உள்ளனர். முர்டோக் தனது உலகளாவிய ஊடக கட்டுப்பாட்டை கடந்த நவம்பரில் தனது மகன் லாச்லனிடம் ஒப்படைத்தார்.

இந்த நிலையில், இவர் தனது நீண்ட நாள் காதலியான எலெனா ஜுகோவாவை (67) திருமணம் செய்து கொள்வதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். எலெனா ஜுகோவா ஒரு ஓய்வுபெற்ற மூலக்கூறு உயிரியலாளர் ஆவார். முர்டோக்கும் அவரது காதலிக்கும் இடையே ஆன வயது வித்தியாசம் 25 வருடங்கள் ஆகும். இது இவருடைய 5-வது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Rupert Murdoch

ரூபர்ட் முர்டோக்வின் முதல் மனைவி பெடிர்கா புக்கர். ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர் விமான பணிப்பெண் ஆவார். இவரை 1956-ம் ஆண்டு ரூபர்ட் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு 6 குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக 1967-ம் ஆண்டு முதல் மனைவியை ரூபர்ட் விவாகரத்து செய்தார்.

இதனை தொடர்ந்து 1967-ம் ஆண்டு அனா டெவோ என்ற செய்தி வாசிப்பாளரை ரூபர்ட் 2வது திருமணம் செய்து கொண்டார். இவருடன் ரூபர்ட் 32 ஆண்டுகள் வாழ்ந்தார். பின்னர், கருத்துவேறுபாடு காரணமாக 2வது மனைவி அனாவை ரூபர்ட் கடந்த 1999-ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

Rupert Murdoch

இதையடுத்து, வெண்டி டங்க் என்பவரை ரூபர்ட் 1999-ம் ஆண்டு 3வது திருமணம் செய்தார். அவரையும் கடந்த 2013-ம் ஆண்டு ரூபர்ட் விவாகரத்து செய்தார். இதனையடுத்து, 2016-ம் ஆண்டு ஜெர்ரி ஹால் என்பவரை ரூபர்ட் 4வது திருமணம் செய்தார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக ஜெர்ரியை கடந்த 2022-ம் ஆண்டு ரூபர்ட் விவாகரத்து செய்தார். ஒட்டுமொத்தமாக 4 திருமணங்கள் செய்த ஜெர்ரிக்கு மொத்தம் 6 குழந்தைகள் உள்ளனர். தற்போது தனது 93 வயதில் 5வது திருமணம் செய்துள்ள ரூபர்ட் தம்பதியருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

From around the web