92 வயதில் 5வது திருமணம்.. 67 வயது காதலியை மணக்கிறார் பிரபல தொழிலதிபர்!

 
Rupert Murdoch

92 வயதான ரூபர்ட் முர்டோக் தனது காதலி எலினா ஜுகோவாவை திருமணம் செய்துள்ள நிகழ்வு சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி உள்ளது.

அமெரிக்காவின் பிரபல ‘நியூஸ் வேர்ல்ட் மீடியா’ அதிபர் ரூபர்ட் முர்டோக் (92). தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், பாக்ஸ் நியூஸ் உள்ளிட்ட அமெரிக்க செய்தி ஊடகங்களின் உரிமையாளர். ரூபர்ட் சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் 16 ஆயிரம் கோடி. அவருக்கு  மகன், மகள்கள்  என 6 பேர் உள்ளனர். முர்டோக் தனது உலகளாவிய ஊடக கட்டுப்பாட்டை கடந்த நவம்பரில் தனது மகன் லாச்லனிடம் ஒப்படைத்தார்.

இந்நிலையில், இவர் தனது நீண்ட நாள் காதலியான எலெனா ஜுகோவாவை (67) திருமணம் செய்து கொள்வதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். எலெனா ஜுகோவா ஒரு ஓய்வுபெற்ற மூலக்கூறு உயிரியலாளர் ஆவார். முர்டோக்கும் அவரது காதலிக்கும் இடையே ஆன வயது வித்தியாசம் 25 வருடங்கள் ஆகும். இந்த திருமணத்தை கலிபோர்னியாவில் உள்ள தனது பங்களாவில் நிகழ்த்த உள்ளதாக தெரிவித்துள்ளார். இது இவருடைய 5-வது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Rupert Murdoch

ரூபர்ட்  முர்டோக்வின் முதல் மனைவி பெடிர்கா புக்கர். ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர் விமான பணிப்பெண் ஆவார். இவரை 1956-ம் ஆண்டு ரூபர்ட் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு 6 குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக 1967-ம் ஆண்டு முதல் மனைவியை ரூபர்ட் விவாகரத்து செய்தார்.

இதனை தொடர்ந்து 1967-ம் ஆண்டு அனா டெவோ என்ற செய்தி வாசிப்பாளரை ரூபர்ட் 2-வது திருமணம் செய்துகொண்டார். இவருடன் ரூபர்ட் 32 ஆண்டுகள் வாழ்ந்தார். பின்னர், கருத்துவேறுபாடு காரணமாக 2வது மனைவி அனாவை ரூபர்ட் கடந்த 1999-ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.


இதையடுத்து, வெண்டி டங்க் என்பவரை ரூபர்ட் 1999-ம் ஆண்டு 3வது திருமணம் செய்தார். அவரையும் கடந்த 2013-ம் ஆண்டு ரூபர்ட் விவாகரத்து செய்தார். இதனையடுத்து, 2016-ம் ஆண்டு ஜெர்ரி ஹால் என்பவரை ரூபர்ட் 4வது திருமணம் செய்தார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக ஜெர்ரியை கடந்த 2022-ம் ஆண்டு ரூபர்ட் விவாகரத்து செய்தார். ஒட்டுமொத்தமாக 4 திருமணங்கள் செய்த அவருக்கு மொத்தம் 6 குழந்தைகள் உள்ளனர். தற்போது தனது 92வது வயதில் 5வது திருமணத்திற்கு ரூபர்ட் தயாராகி வருகிறார்.

From around the web