பட்டப்பகலில் நிறைமாத கர்ப்பிணியை கத்தியால் குத்திய நபர்.. அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!!

 
wales

வேல்ஸில் நிறைமாத கர்ப்பிணி ஒருவரைக் மர்ம நபர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேல்ஸ் நாட்டின் அபெர்ஃபான் கிராமத்தில், ஒரு பெண் தன் குழந்தைகளை பள்ளியில் விடுவதற்காக வந்துள்ளார். அவர் குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு வெளியே வரவும், அங்கு நீண்ட நேரமாக அவரது வருகைக்காக காத்திருந்த ஒருவர், அந்தப் பெண்ணை கத்தியால் சரமாரியாக 5 முறை குத்தியுள்ளார்.

நேற்று காலை 9.10 மணியளவில் இந்த கோர சம்பவம் நிகழ்ந்த நிலையில், மக்கள் ஓடிவந்ததால் கத்தியால் குத்தியவர் தப்பி ஓடியுள்ளார். கத்தியால் குத்தப்பட்ட 29 வயது பெண் நிறைமாத கர்ப்பிணி ஆவார். அவரது பெயர் ஆண்ட்ரியா பிண்டிலி.

Murder

கிறிஸ்துமஸ் நேரத்தில் அவருக்கு குழந்தை பிறக்க இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில், இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. என்றாலும், அவர் குத்தப்பட்டதும் உடனடியாக ஓடிவந்தவர்களில் ஒருவர் கேட்டி ராபர்ட்ஸ் (31) என்னும் செவிலியர் என்பதால், ஆண்ட்ரியாவின் உயிர் காப்பாற்றப்பட்டதாக கருதப்படுகிறது.

ஏழு மணி நேரத்திற்குப் பின், வீடு ஒன்றில் பதுங்கியிருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். 29 வயதான அவர், ஆண்ட்ரியாவுக்கு அறிமுகமானவர் தான் என போலீசார் தெரிவித்துள்ள நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Wales

இந்த சம்பவம் காலை நேரத்தில் நிகழ்ந்ததால், பள்ளிக்கு வந்த குழந்தைகளும், குழந்தைகளை பள்ளியில் விடவந்த பெற்றோரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். என்றாலும், கத்தியால் குத்தப்பட்ட ஆண்ட்ரியாவுக்கோ, அவரது வயிற்றிலிருந்த குழந்தைக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது சற்று ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது.

From around the web