வீட்டின் கொல்லைப்புறத்தில் ஒரு குடும்பத்தையே கொன்று புதைத்த நபர்.. அமெரிக்காவை அதிரவைத்த சம்பவம்

 
Florida

அமெரிக்காவில் 2 சிறார்கள் உட்பட ஒரு குடும்பத்தையே வீட்டு உரிமையாளர் ஒருவர் கொலை செய்து உடல்களை கொல்லைப்புறத்தில் எரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் குடியிருந்த வீட்டிற்கு வாடகை தராத ஆத்திரத்தில் அந்த வீட்டின் உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. ரோரி அட்வுட் என்ற 25 வயது நபரே இந்தக் கொடூரத்தை நடத்தியுள்ளார்.

சம்பவத்தன்று அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் போலீசாருக்கு தகவல் அளித்த நபர், ரோரி அட்வுட் தமது சகோதருக்கு  காணொளி அழைப்பில் தொடர்பு கொண்டு உதவி கோரியதாகவும், சாம்பல் மற்றும் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Florida

அத்துடன் அந்த  காணொளி அழைப்பில் இரத்தக் கறை மற்றும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் சடலங்களைப் பார்க்க முடிந்தது என்றும் அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தரப்பு, தொடர்புடைய வீட்டின் கொல்லைப்புறத்தில் தீ மூட்டியிருப்பதை உறுதி செய்தனர். விசாரணையில், அந்த நபர் முதலில் பொய்யான தகவலை தெரிவித்துள்ளார்.

தமது குடியிருப்பில் தங்கியிருந்த நால்வர் கொண்ட குடும்பம் புதன்கிழமை மதியத்திற்கு மேல் வெளியேறியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் தீவிர விசாரணைக்கு பின்னர், அந்த குடும்பத்தினரை வாடகை கட்டணம் தொடர்பில் ஜூன் 1-ம் தேதி வீட்டில் இருந்து வெளியேற்றியதாகவும், ஆனால் புதன்கிழமை அவர்கள் எதிர்பாராமல் மீண்டும் தமது குடியிருப்பு திரும்பியதாகவும் தெரிவித்துள்ளார். 

FLorida

மட்டுமின்றி, கத்தியுடன் தம்மை அவர்கள் தாக்க முயன்றதாகவும், இந்த களேபரங்களுக்கு இடையே பிலிப் என்பவர் துப்பாக்கியால் சுட்டத்தில், அவரது மனைவி மரணமடைந்தார் என்றும், உயிருக்கு பயந்து பிலிப்பை தாம் சுட்டுவிட்டதாகவும் ரோரி அட்வுட் தெரிவித்துள்ளார். ஆனால் பிலிப் தம்பதியின் இரு பிள்ளைகள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்று விளக்காமல், பிலிப் தம்பதியே தங்கள் பிள்ளைகள் இருவரையும் கொன்றதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னரே, அந்த நால்வரின் சடலங்களையும் கொல்லைப்புறத்தில் குழி ஒன்றில் தள்ளி நெருப்பு வைத்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அதன் பின்னர் நடந்த விசாரணையில் நால்வரின் மரணத்திற்கு தாம் மட்டுமே காரணம் என்று வாக்குமூலம் அளித்துள்ளார். தற்காப்பு என ரோரி அட்வுட் அதிகாரிகளிடம் கூறியிருந்தாலும், ஆதாரங்களின் அடிப்படையில், இது திட்டமிட்ட கொலை என்றே கூறப்படுகிறது.

From around the web