போலாந்தில் 30 மாடி கட்டிடத்தில் சாகசம் செய்ய முயன்ற வாலிபர் கைது.. வைரல் வீடியோ!

 
Poland

போலந்தில் 30 மாடி கட்டித்தில் வாலிபர் ஒருவர் எந்த பாதுகாப்பு உபகரணமும் இல்லாமலேயே வெறும் கைகளால் ஏற முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

போலந்தின் பியுனஸ் அயர்ஸ் பகுதியில் 30 மாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் கயிறுகள் உள்ளிட்ட எந்த பாதுகாப்பு உபகரணமும் இல்லாமலேயே வெறும் கைகளால் ஏற முயன்ற வாலிபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

Poland

அதில், அர்ஜென்டினா கால்பந்து ஜெர்சி அணிந்திருந்த மார்சின் பானோட் என்ற வாலிபர் அங்குள்ள 30 மாடி கட்டிடத்தில் ஏறும் காட்சிகள் உள்ளது. பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லாமல் வெறும் கைகளால் கட்டிட சுவர்களை பிடித்து ஸ்பைடர்மேன் போன்று கட்டிடத்தில் ஏறிய அவரின் சாகச செயலை அந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், ஆம்புலன்சுகள் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் நீண்ட போராட்டத்திற்கு பிறகு 25-வது மாடியில் ஏறிக்கொண்டிருந்த மார்சின் பானோடை தடுத்து நிறுத்தி கீழே இறக்கி கைது செய்தனர். 


36 வயதான மார்சின் பானோட் இதற்கு முன்பு வேறு சில நாடுகளிலும் இதுபோன்று சாகசங்களை முயற்சி செய்துள்ளார். சமூக வலைதளங்களில் இவரை பல ஆயிரக்கணக்கானோர் பின் தொடரும் நிலையில், அதில் மேலும் பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காகவே அவர் இது போன்ற சாகசங்களை செய்வது தெரிய வந்துள்ளது.

From around the web