2 குழந்தைகள் 3 நாய்களுடன் கணவன் மனைவி சுட்டுக்கொலை.. சாலை விபத்தில் பலியான கொலையாளி! அமெரிக்காவில் பரபரப்பு!

 
Romeoville

அமெரிக்காவில் கணவன், மனைவி, அவர்களது 2 குழந்தைகள் மற்றும் 3 நாய்கள் என அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவின் சிகாகோ மாகாணம் வில் கவுண்டியில் உள்ள ரோமியோவில்லி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கணவன், மனைவி, அவர்களது 2 குழந்தைகள் மற்றும் 3 நாய்கள் என அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படுகொலை நடந்த வீட்டிற்கு அவர்களது உறவினர் ஒருவர் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியாமல் போனதை அடுத்து உறவினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தொலைபேசியில் அழைத்த உறவினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

Gun

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சோதனை செய்த போது, வீட்டில் உள்ள அனைவரும் கொல்லப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ரோமியோவில்லி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

முதல் கட்ட விசாரணையில் தம்பதியின் பெயர் ஆல்பர்டோ ரோலன், ஜொரைடா பார்த்தலோமி என தெரியவந்துள்ளது. உயிரிழந்த குழந்தைகள் 10 வயதாகும் ஏட்ரியல், 7 வயதாகும் டீகோ என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிறு அதிகாலைக்கு இடையே நடந்திருக்க கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Romeoville

வெளி ஆட்கள் யாரேனும் உள்ளே வந்து இந்த கொலையை செய்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனர். இதில் அவர்களுக்கு போதுமான தடயங்கள் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து குடும்பத்தில் உள்ள யாரேனும் தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் மற்றவர்களை கொன்று, கடைசியில் அவர்களும் உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.      

From around the web