காதல் தோல்வி.. டேட்டிங் ஆஃப்கள் மூலம் 3 மனைவிகள்.. 2 காதலிகள்.. ஜப்பானில் வாழும் மன்மதன்!

ஜப்பானை சேர்ந்த ஒருவர் 3 மனைவிகள் மற்றும் 2 காதலிகள் என தனது வாழ்க்கை மூலம் பலரையும் வயிற்றெரிச்சலுக்கு உள்ளாக்கி இருக்கிறார்.
ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியைச் சேர்ந்தவர் ரியூதா வதனாபே (36). இவர் கடந்த 10 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல், 3 மனைவிகள், 2 காதலிகள் மூலம் 10 குழந்தைகளை பெற்றெடுத்து தனது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதல் தோல்வியால் மிகவும் வருத்தத்தில் இருந்துள்ளார் ரியூதா. இதையடுத்து, அதிலிருந்து மீள, டேட்டிங் ஆஃப்கள் மூலம் பல காதல்களை செய்துள்ளார். தொடர்ந்து 4 பெண்களை திருமணம் செய்து, குழந்தைகளை பெற்றுக்கொண்டார். ஒரு மனைவி மட்டும் இவரை விட்டு பிரிய, மேலும் 2 பெண்களை இவர் காதலித்து வருகிறார்.
இப்படி இருப்பவருக்கு மாத செலவுகளுக்கு என்ன செய்வார் என உங்களுக்கு கேள்வி எழலாம். ஒரு மாதத்திற்கு சுமார் ரூ.5 லட்சம் (914,000 யென்) இவருக்கு வீட்டை பராமரிக்க செலவாகிறது. 10 ஆண்டுகளாக வேலைக்கு ஏதும் செல்லாமல், வீட்டை பராமரித்து, குழந்தைகளையும் கவனித்துக் கொள்வதால் ரியூதாவுக்கான செலவுகளை அவர்களின் மனைவி மற்றும் காதலிகளே பார்த்துக் கொள்கின்றனர்.
This Japanese 35-Year-Old Man, Watanabe Ryuta, is a Self-Professed Expert When it Comes To Mooching Off His Four Wives & Two Girlfriends! While He's A Stay-At-Home Parent & Husband, His Ladies Go Out To Provide For The House! This Dude is a Real Japanese Urban Legend! HAHA, LMAO pic.twitter.com/6wZ6DUMfb5
— Ahmadov Khatibov (Lebanese Emperor/Samurai)🗲👻 (@AhmadKhatibLB) June 20, 2024
இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள ரியூதா, “நிறைய திருமணம் செய்து 54 குழந்தைகள் பெற்று ‘திருமணக் கடவுள்’ என்ற பெயரொடு வாழவேண்டும்” என்பதை தனது இலக்கு என்று தெரிவித்துள்ளார். மேலும் ஒவ்வொரு இரவையும் ஒவ்வொரு மனைவியோடு பகிர்ந்துகொள்வதால், யாரும் பொறாமை கொள்வதில்லை என தெரிவித்து, மற்ற ஆண்களை பொறாமைப்பட வைத்துள்ளார்.
இவரின் இந்த வாழ்க்கை முறையை பலருக்கும் ஆச்சரியத்தையும் வயிற்றெரிச்சலையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது.