காட்டுக்குள் முயல் கூட்டம் போல் ஓடும் குட்டி டைனோசர்களா..? இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

 
dinosaurs

முயல் கூட்டம்போல் ப்ரோண்டோசரஸ் வகை டைனோசர் குட்டிகள் குதித்தோடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பூமியில் மனித இனம் பிறப்பதற்கு முன்பே டைனோசர் என்ற விலங்கு இனம் இருந்து வந்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பூமியின் தட்ப வெப்பநிலை மாற்றம் மற்றும் பூமியின் மீது மோதிய ராட்சத விண்கல் காரணமாகவும் மொத்த டைனோசர் இனமும் அழிந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அவ்வாறு அழிந்து போன டைனோசர்களின் புதை படிமங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன. இதுவரை கிடைத்த புதைபடிமங்களின் அடிப்படையில் டைனோசர்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் வகையைச் சேர்ந்தவை என்பது நிரூபனமாகி இருந்தாலும், பறவை இனத்திற்கும் டைனோசர் இனத்திற்கும் ஏதேனும் தொடர்புகள் இருக்குமா என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், குட்டி டைனோசர்கள் போல் தோற்றமளிக்கும் அரியவகை உயிரினம் குறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பியூடெங்கேபிடென் என்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், குட்டி டைனோசர்கள் போல் காட்சியளிக்கும் சில விலங்குகள், காட்டுக்குள் ஓடும் காட்சி பதிவாகியுள்ளது.

dinosaurs

பலரும் இந்த வீடியோவை ஆச்சரியத்துடன் கடக்க, குட்டி குட்டி டைனோசர்கள் குதித்தோடும் இந்த வீடியோ நிஜமாக எடுக்கப்பட்டது தான் எனினும் இது ஒரு பிராங்க் (prank) வீடியோ என்பதை மற்றொரு தரப்பு நெட்டிசன்கள் கண்டுபிடித்து உற்சாகமாக பதிவிட்டு வருகின்றனர்.

இந்த வீடியோ க்ளிப்பிங்கை சில பல முறை உற்று பார்த்த பின் இது ப்ராங்க் என்பதைக் கண்டறிந்த நெட்டிசன்கள் கமெண்ட் செக்‌ஷனில் இது குறித்து ஆச்சரியத்துடனும் மகிழ்ச்சியுடனும் உரையாடி வருகின்றனர்.

ப்ரோண்டோசரஸ் (Brontosuarus) எனப்படும் கழுத்து நீண்ட டைனோசர் இனத்தின் குட்டி போல் இந்த வீடியோவில் இந்த விலங்கினம் காட்சியளிக்கும் நிலையில், உண்மையில் அவை கோட்டி (coati) எனும் விலங்கு குதித்தோடும் வீடியோவின் ரிவர்ஸ் வீடியோவாகும்.


அமெரிக்க காடுகளில் வாழும் குரங்கைப் போன்றதொரு விலங்கினமான கோட்டிக்கள், உண்மையில் குரங்குகள் அல்ல. அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட இந்த விலங்குகள் பன்றியின் நீண்ட, தசை மூக்கு, ரக்கூனின் வால் மற்றும் குரங்கின் மரம் ஏறும் திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 

இ வை காட்டுப்பாதையைக் கடக்கும் வீடியொவை ரிவர்ஸ் செய்து யாரோ ஒருவர் பதிவிட, அவை டைனோசர்கள் போல் தோற்றமளித்த நிலையில் ட்ரெண்டாகி வைரலாகியுள்ளது.இப்போது டைனோசர்கள் உட்பட அனைத்து வகையான உயிரினங்களுக்கும் இது குழப்பமாக இருக்கலாம்!

இந்நிலையில் இந்த வீடியோவை பார்த்து தாங்கள் ஏமாந்து விட்டதாக பல நெட்டிசன்கள் ஒப்புக்கொண்டு சுவாரஸ்யமான கமெண்டுகளை பகிர்ந்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

From around the web