சீனாவில் நிலச்சரிவு.. மண்ணுக்குள் புதைந்த 10 வீடுகள்.. 47 பேரின் கதி என்ன? மீட்புப்பணிகள் தீவிரம்

 
China

சீனாவில் இன்று (ஜன. 22) காலை ஏற்பட்ட நிலச்சரிவில் 47 பேர் மண்ணிற்குள் புதைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் யுனான் மாகாணத்தின் ஜாடோங் நகரில் லியாங்ஷூய்குன் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இன்று காலை 6 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் பல வீடுகள் மண்ணில் புதைந்தது. இந்த நிலச்சரிவில் புதைந்த வீடுகளில் இருந்து 500-க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

China

மேலும், 10-க்கும் மேற்பட்ட வீடுகளை சேர்ந்த 47 பேர் மண்ணுக்குள் புதைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட மீட்புக்குழுவினர் 10-க்கும் மேற்பட்ட வீடுகளை சேர்ந்த 47  பேரை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மீட்பு பணி ஒரு பக்கம் நடந்துவரும் நிலையில், இன்னும் எத்தனை பேர் காயமடைந்துள்ளனர். எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற எந்த தகவலும் வெளியாகவில்லை. விரைவில் அதற்கான தகவல் வெளிவரும் என கூறப்படுகிறது.


மேலும், வடமேற்கில் சீனாவின் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஒரு மாதத்திற்குப் பிறகு தற்போது நிலச்சரிவு ஏற்பட்டது . கடந்த ஆண்டு டிசம்பர் 18 அன்று ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 149 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web