கைலாசா ஒரு கற்பனை நாடு... மோசடியில் பிடிபட்டு விரட்டியடிக்கப்பட்ட நித்தியானந்தா பக்தர்கள்!!

 
Amazon Rainforest

கைலாசா என்பது ஒரு கற்பனையான நாடு என்று கூறியதுடன் பழங்குடி மக்களை ஏமாற்றிப் போலிப்பத்திரப் பதிவு செய்ததற்காக நித்தியானந்தாவின் பக்தர்களை நாடு கடத்தியுள்ளது பொலிவியா அரசாங்கம்.

ஈக்குவடார் நாட்டில் ஒரு தீவை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா என்று பெயரிட்டுள்ள சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவின் பக்தர்கள் பொலிவியா நாட்டிலுள்ள  அமேசான் காட்டில் 10 லட்சம் ஏக்கர் நிலத்தை 1000 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க பழங்குடி மக்களிடம் பத்திரப் பதிவு செய்துள்ளனர், இதை அறிந்து கொண்ட பொலிவியா அரசும் பழங்குடி மக்கள் நலக் கூட்டமைப்பும் இந்த குத்தகை சட்டப்படி செல்லாது என்று அறிவித்ததுடன், நித்தியானந்தா பக்தர்களையும் நாடு கடத்தியுள்ளனர். 

சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் பொலிவியா நாட்டுக்குள் வந்த நித்தியானந்தாவின் பக்தர்கள், பழங்குடி மக்களிடம் ஆசை காட்டி இந்தச் செயலை செய்துள்ளனர். அவர்களை நாட்ட்டை விட்டு வெளியேற்றதுடன், கைலசா என்ற நாடே கற்பனையானது என்றும் பொலிவியா அரசு அறிவித்து விட்டது.

From around the web