பதவி விலகினார் ஜஸ்டின் ட்ரூடோ!! கனடாவில் புதிய பிரதமர் எப்போது?

 

நாம் முன்னதாக வெளியிட்டுருந்தது படியே, ஜஸ்டின் ட்ரூடோ பிரதமர் மற்றும் லிபரல் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சியின் அடுத்த தலைவர் மற்றும் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரையில் இரு பதவிகளிலும் நீடிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நான் ஒரு போராளி. இந்த நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் தொடர்ந்து போராடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். வரப்போகும் தேர்தலில் மிகச்சிறந்த தலைவர் இந்த நாட்டுக்கு கிடைக்கவேண்டும். அது நானாக இருக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

கனடாவில் ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால் ஆளும் லிபரல் கட்சியிலும் தலைவர் மற்றும் பிரதமராக இருக்கும் ஜஸ்டின் ட்ருடோ மீது பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற 2 பாராளுமன்ற இடைத் தேர்தல்களில் ஆளும் லிபரல் கட்சி தோல்வியடைந்ததையொட்டி கட்சியினர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராகத் திரும்பியுள்ளனர்.

சமீபத்தில் துணை பிரதமரும், நிதித்துறை அமைச்சருமான கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் பதவியிலிருந்து விலகினார். அதைத் தொடர்ந்து நிதித்துறை அமைச்சராக டாம்னிக் லே ப்ளாங் ஐ ட்ரூடோ நியமித்தார். த்ற்போது பிரதமர் பதவியிலிருந்தும் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக ஜஸ்டின் ட்ருடோ முடிவு செய்துள்ளதாக அதிகாரப் பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. டாம்னிக் லே ப்ளாங் ஐ இடைக்காலத் தலைவர் மற்றும் இடைக்கால பிரதமராக இருக்குமாறு ட்ரூடோ கேட்டதாகவும் அவர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

லிபரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது. அதற்கு முன்னதாகவே பிரதமர் பதவியிலிருந்து விலகிவிடுவார் என்று கூறப்பட்ட நிலையில், இன்று திங்கட்கிழமையே தனது முடிவை அறிவித்துள்ளர் ட்ரூடோ.

முன்னாள் துணைப் பிரதமர் கிரிஸ்டியா ஃப்ரீலேண்ட் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடாவுக்காக ஆற்றிய பங்களிப்புக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் ட்ரூடோவுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் வாழ்த்துகள் என்றும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கிரிஸ்டியா ஃப்ரீலேண்ட் புதிய தலைவர் மற்றும் பிரதமருக்கான போட்டியில் முன்னணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. புதன்கிழமை நடக்கும் லிபரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கூட்டத்தில் இது தெரியவரும்,

From around the web