வெறும் ரூ. 15 லட்சம் மட்டுமே.. சொந்தமாக ஒரு நாட்டையே உருவாக்கிய நபர்.. ஆச்சரியம் ஆனால் உண்மை

 
slowjamastan

ராண்டி வில்லியம்ஸ் என்பவர் தான் தங்குவதற்காக தனது சொந்த நாட்டையே உருவாக்கி அதில் குடியேறியுள்ளார்.

உலகில் எந்த நகரத்திலும் ரூ.15 லட்சத்தில் ஒரு வீடு கூட வாங்க முடியாது. ஆனால் ஒருவர், தான் தங்குவதற்காக தனது சொந்த நாட்டையே உருவாக்கி அதில் குடியேறியுள்ளார். இது நிச்சயம் ஆச்சரியமான விஷயம்தான் ஆனால் உண்மைதான். உலகம் முழுவதும் பயணம் செய்த ஒரு அமெரிக்கர் தனது சொந்த நாட்டை உருவாக்கி இருக்கிறார்.

அந்த நாட்டின் பெயர் ஸ்லோஜமஸ்தான் குரியரசு (Republic of Slowjamastan). அமெரிக்காவில் அமைந்துள்ள இந்த நாட்டை ராண்டி வில்லியம்ஸ் என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா பாலைவனத்தில் 11.07 ஏக்கர் காலி நிலத்தை 19 ஆயிரம் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.15,66,920) வாங்கி தனது நாட்டை உருவாக்கி  டிசம்பர் 1, 2021 அன்று தனி நாடாக ராண்டி அறிவித்தார்.

slowjamastan

ராண்டி தனது நாட்டிற்கு வழங்கிய அதிகாரப்பூர்வ பெயர், “ஸ்லோஜமஸ்தான் மக்கள் குடியரசின் இறையாண்மை தேசத்தின் ஐக்கிய பிரதேசங்கள்” ஆகும். நாட்டை உருவாக்கிய இந்த நபர் தன்னை “ஸ்லோஜாமஸ்தான் சுல்தான்” என்று பிரகடனப்படுத்தியுள்ளார்.

2021-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி அன்று, மதியம் 12:26 மணிக்கு, ஸ்லோஜ்மஸ்தான் அமெரிக்காவிடம் இருந்து சுதந்திரத்தை பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. வில்லியம்ஸ் அதை தனது நாட்டின் தலைநகரான டப்ளினில் நேரடியாக ஒளிபரப்பினார். இந்த நாட்டிற்கு அதன் சொந்த கொடி, பாஸ்போர்ட், நாணயம் மற்றும் தேசிய கீதம் உள்ளது.

slowjamastan

ஸ்லோஜ்மஸ்தான் குடியரசில் 500-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட குடிமக்கள் உள்ளனர் மற்றும் 4,500 க்கும் மேற்பட்டோர் குடியுரிமைக்கு விண்ணப்பித்து உள்ளனர். வில்லியம்ஸ் மற்ற நாடுகளுடன் அரசு ரீதியான உறவுகளை கட்டியெழுப்புவதில் பணிபுரிந்து வருவதாகவும், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வனுவாட்டு மற்றும் அமெரிக்கா உட்பட அவரது சமீபத்திய பயணங்களில் 16 வெவ்வேறு நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த நாடு ஐக்கிய நாடுகளின் சான்றளிக்கப்பட்ட நாடு அல்ல. இது மைக்ரோனேஷன் என்று செல்லப்படும் குழுவை சேர்க்கப்படும். ஆனால் வில்லியம்ஸின் கூற்றுப்படி, ஸ்லோஜ்மஸ்தான் 1933 இன் மான்டிவீடியோ மாநாட்டால் வரையறுக்கப்பட்ட இறையாண்மை கொண்ட தேசிய-அரசுக்கான அளவுகோல்களை தொழில்நுட்ப ரீதியாக ஈடுசெய்துள்ளது. அதனால் தனிப்பட்ட நாடாக அறிவிக்கப்படவேண்டும் என்று கோருகிறார்.

From around the web