Breaking - ட்ரம்ப் குடியுரிமை ஆணைக்கு இடைக்காலத் தடை விதித்தார் நீதிபதி

அமெரிக்காவில் பிப்ரவரி 19ம் தேதிக்குப் பிறகு பிறக்கும் குழந்தைகள், அமெரிக்க குடியுரிமை கொண்ட பெற்றோர்களுக்கு பிறந்தால் மட்டுமே பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை என்று அதிபர் ட்ரம்ப் ஆணை பிறப்பித்து இருந்தார்.
இதை எதிர்த்து 22 மாநிலங்களும் சான்ப்ரான்சிஸ்கோ மற்றும் வாஷிங்டன் டி.சி நகரங்கள் அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர். அரிசோனா, இலனாய், ஆரகன், வாஷிங்டன் மாநிலங்கள் ட்ரம்ப்-ன் ஆணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததும், நீதிபதி ஜான் கோகினவர் இடைக்கால தடை விதித்தார். தற்போது இந்த தடை நான்கு மாநிலங்களுக்கு மட்டுமே அமலுக்கு வந்துள்ளது. அமெரிக்கா முழுவதும் விரைவில் தடை உத்தரவு அமலுக்கு வரும் என்று தெரிகிறது.
மேலும் அதிபர் ட்ரம்ப்-ன் குடியுரிமை ஆணை அப்பட்டமாக அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்ற கடுமையான கருத்தையும் தெரிவித்துள்ளார்.