வேலைக்காரரால் அடித்த ஜாக்பாட்.. சுத்தம் செய்யும் கிடைத்த லாட்டரியால் கோடீஸ்வரரான அமெரிக்கர்!!

 
Khalil Soussa

வீட்டின் வேலைக்காரர் கண்டுபிடித்து கொடுத்த லாட்டரி டிக்கெட்டால் அமெரிக்கர் ஒருவர் 8.30 கோடிக்கு சொந்தமாகி உள்ளார்.

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணம் மேட்போர்ட் பகுதியைச் சேர்ந்தவர் கலீல் சவுசா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 15 மில்லியன் டாலர் பரிசுக்கான ‘மணி மேக்கர் ஸ்கிராட்ச்’ டிக்கெட்டை வாங்கியுள்ளார். டிக்கெட்டை வாங்கிய கலீல் சவுசா, அதனை பத்திரப்படுத்தி வைத்துள்ளார். ஆனால் எங்கு டிக்கெட்டை வைத்தோம் என்பதை மறந்துவிட்டார்.

இந்த நிலையில் அந்த லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் நடைபெற்றுள்ளது. அப்போது வீடு முழுவதும் லாட்டரி டிக்கெட்டை தேடி பார்த்துள்ளார். ஆனால் லாட்டரி டிக்கெட் கிடைக்கவே இல்லை. இதனை தொடர்ந்து லாட்டரி டிக்கெட்டை தேடும் பணியை கலீல் சவுசா விட்டுவிட்டு வேலையை பார்க்க தொடங்கியுள்ளார்.

Lottery

இந்நிலையில் கலீல் சவுசா வீட்டின் வேலைக்காரர் வீட்டை சுத்தம் செய்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த பாத்திரம் ஒன்றில் லாட்டரி டிக்கெட் இருந்ததை கண்டுபிடித்துள்ளார். உடனே அதனை தனது முதலாளியிடம் வழங்கியுள்ளார். அந்த லாட்டரி டிக்கெட்டை கலீல் சவுசா லாட்டரி அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.

அப்போது அந்த லாட்டரி டிக்கெட் ஒரு மில்லியன் டாலர் பரிசை வென்றது தெரியவந்தது. இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த கலீல் சவுசாவுக்கு, வரி பிடித்தம் போக 6,50,000 டாலர் பரிசு தொகையாக வழங்கப்பட்டது. இந்திய ரூபாயின் மதிப்பில் இதன் மதிப்பு 8.30 கோடி ரூபாய்க்கு மேல் ஆகும். பரிசுத் தொகையை பெற்றுக்கொண்ட கலீல் சவுசா அதனை தேவைப்படும் நண்பருக்கு உதவ உள்ளதாகவும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

dollars

கலீல் சவுசா வென்ற டிக்கெட் மெட்ஃபோர்டு சேலம் தெருவில் அமைந்துள்ள டோனிஸ் கன்வீனியன்ஸ் என்ற கடையில் வாங்கியுள்ளார். வெற்றி பெற்ற டிக்கெட்டை விற்பனை செய்த கடையின் உரிமையாளர்கள் பரிசு தொகையில் 10,000 டாலர்களை பெறுவார்கள். லாட்டரி பரிசுகளில் பெரும் தொகையை வெல்வது அமெரிக்காவில் சர்வ சாதாரணமாகி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, கலிபோர்னியாவில் லாட்டரி டிக்கெட் வாங்கிய நபர் ஒருவர் 1.73 பில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாயின் 7,500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பவர்பால் ஜாக்பாட்டை வென்றார். பவர்பால் லாட்டரி என்பது அமெரிக்காவின் லாட்டரி வரலாற்றில் இரண்டாவது பெரிய ஜாக்பாட் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web