நீங்களா வெளியேறிட்டீங்கன்னா நல்லது.. அதிபர் ட்ரம்ப்-ன் புதுத் திட்டம்!!

 
DHS App

சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்கள் விசா காலம் முடிவுற்ற பிறகும் தங்கியிருப்பவர்கள் தாங்களாகவே நாட்டை விட்டு வெளியேறுவதற்கு புதிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது ட்ரம்ப் அரசு. இதற்காக ஒரு மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த செயலியை சட்டவிரோதமாக குடியிருப்பவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக 200 மில்லியன் டாலர்கள் செலவிட்டு விளம்பரங்கள் செய்து வருகின்றனர்.

சட்டவிரோதமாக குடியிருப்பவர்கள் தங்கள் விவரங்களை இந்த செயலில் பதிவு செய்து விட்டு, அமெரிக்காவை விட்டு தாங்களாகவே சொந்த நாட்டுக்குத் திரும்பிச் சென்று விடலாம். வழக்கு, கைது, அபராதம் என எந்த நடவடிக்கையும் இருக்காது. மீண்டும் அமெரிக்காவுக்கு சட்டப்பூர்வமாக வருவதற்கும் எந்தத் தடையும் கிடையாது.

சட்டவிரோதமாக குடியிருப்பவர்களை நாட்டை விட்டு வெளியேறச் சொல்லி இறுதி ஆணை அனுப்பிய பிறகும் அமெரிக்காவை விட்டு வெளியேறாதவர்களுக்கு நாளொன்றுக்கு 700 டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என்றும் புதிய விதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தாமாகவே நாட்டை விட்டு வெளியேறும் திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், நாட்டை விட்டு வெளியேற்றும் செலவு மிச்சப்படுத்தப்படும். குடியுரிமைத் துறை அதிகாரிகளின் நேர விரயமும் மிச்சமாகும் என்று தெரிகிறது.

News Hub