ட்ரம்ப் இறந்துட்டாரா? செய்தியாளர்கள் கேள்வியும் அதிபர் ட்ரம்ப் பதிலும்!!
அமெரிக்காவில் செப்டம்பர் 1ம் தேதி திங்கட்கிழமை தொழிலாளர் நாள் கொண்டாப்பட்டது. அரசு விடுமுறை என்பதால் மூன்று நாட்கள் தொடர் விடுமுறையாக அமைந்தது. நண்பர்கள் உறவினர்களுடன் பொதுமக்களும் அரசியல் தலைவர்களும் இந்த வார இறுதியைக் கொண்டாடினார்கள்.
இந்த வார இறுதியில் அதிபர் ட்ரம்ப் இறந்து விட்டதாக ஒரு புரளி வேகமாகப் பரவியது. செவ்வாய்கிழமை செய்தியாளர்களை அதிபர் ட்ரம்ப் சந்தித்த போது இந்தக் கேள்வியை அவரிடமே செய்தியாள்ர்கள் கேட்டனர். இப்படி ஒரு செய்தி பரவியது குறித்து உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டனர்.
நான் வார இறுதியில் மிகவும் பிஸியாக இருந்தேன் என்னுடைய க்ளப்பில் விடுமுறையைக் கொண்டாடினேன். இரண்டு நாட்கள் வெளியே நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை என்பதற்காக இப்படி ஒரு போலிச் செய்தியைப் பரப்பியுள்ளனர். இப்படி ஒரு செய்தி வந்தது தெரியும். ஆனால் இவ்வளவு அதிகமாக பரவியதை அறிந்திருக்கவில்லை.
பைடன் மாதக்கணக்கில் வெளியே வந்தது இல்லை. அவரைப் பற்றி யாரும் இப்படி புரளியைக் கிளப்பவில்லையே. நான் மிகவும் ஆக்டிவாக இருக்கிறேன். உங்களை சந்திக்கிறேன். இது திட்டமிட்டு பரப்பப்பட்ட போலிச் செய்தி என்று பதிலளித்துள்ளார் அதிபர் ட்ரம்ப்.
அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பில் துணை அதிபர் ஜேடி வான்ஸ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்
