தமிழர்கள் உள்பட தென்னிந்தியர்கள் மீது ஒன்றிய அரசு பாரபட்சமா? கார்த்திகேய சிவசேனாபதி கோரிக்கை!!

 
Rice Shortage

வட இந்தியர்கள் பயன்படுத்தும் பாசுமதி அரிசிக்கு தடை விதிக்காமல் தென் இந்தியர்கள் பயன்படுத்தும் அரிசி வகைகளுக்கு தடை விதித்துள்ள ஒன்றிய அரசு, அரிசிக்கான ஏற்றுமதி  தடையை விலக்க வேண்டும் என்று கார்த்திகேய சிவசேனாபதி கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு அயலகத் தமிழர் நல வாரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி கேட்டுக் கொண்டுள்ளார். 

” ஒன்றிய அரசின் அரிசி ஏற்றுமதித் தடைக்கு தமிழ்நாடு அயலகத் தமிழர் நல வாரியம் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது. தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளுக்கு புழுங்கல் அரிசி முக்கியமானதாகும். இந்த ஏற்றுமதித் தடைவெளிநாடு வாழ் தமிழர்கள் உள்ளிட்ட தென்னிந்தியர்களுக்கு  கடுமையான  அரிசித் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர்கள் மற்றும் தென்னியந்தியர்களின் வாழ்வுமுறையை பாதிக்கும் இந்த ஏற்றுமதித் தடையை ஒன்றிய அரசு உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும். அனைத்து வகை அரிசிகளுக்கும்  ஏற்றுமதியை அனுமதித்து, அயல்நாடுகளில்  தமிழர்கள் உள்ளிட்ட தென்னிந்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள அரிசித் தட்டுப்பாட்டை சரி செய்ய வேண்டும்.

இந்தியாவின் உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய அவசியத்தை உணர்ந்துள்ள அதே வேளையில்,அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கும் ஏற்புடைய  ஒரு சமமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” என கார்த்தியே சிவசேனாபதி அறிக்கையில் கூறியுள்ளார்.

KSS Rice 2

மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ”வட இந்தியர்கள் பயன்படுத்தக்கூடிய பாசுமதி அரிசிக்கு விலக்கு அளித்தும்,  தமிழர்கள் உள்ளிட்ட தென்னியந்தியர்கள் பயன்படுத்தும் அரிசிக்கு ஒன்றிய அரசு தடைவிதித்து வெளிநாடுகளில் வாழும் தென்னியந்தியர்களை பெரும் சிரமத்திற்குள்ளாக்கியுள்ளது.  ஒன்றிய அரசுக்கு இதைச் சுட்டிக்காட்டி தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்துமாறு மாண்புமிகு முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று  குறிப்பிட்டுள்ளார்

அமெரிக்கா, கனடா, ஐரோப்பா. ஆஸ்திரேலியா என எங்கு சென்றாலும் , நம்முடைய பாரம்பரிய உணவு வகைகளையே வீட்டில் சமைத்து வருகிறார்கள். இது நம்முடைய பாரம்பரிய உணவுப் பழக்கத்தை அங்கேயே பிறந்து வளரும் அடுத்த தலைமுறைத் தமிழர்களுக்கும் எடுத்துச் செல்கிறது. கல்லூரியில் படிக்கப் போகும் தமிழ் மாணவர்கள், பிட்ஸா, பர்கர், சான்விட்ச் என அந்நிய உணவு வகைகளைச் சாப்பிட்டாலும்  அம்மாவின் உணவுக்காக ஏங்குவது வாடிக்கையாக இருந்து வருகிறது. வார இறுதியில்  கல்லூரி விடுதிக்குச் சென்று பிள்ளைகளுக்கு உணவு கொடுத்து வரும் பெற்றோர்களை அமெரிக்காவின் அனைத்து ஊர்களிலும் காணலாம்.

இந்தியாவிலிருந்து உணவுப் பொருட்களுக்கு தடை விதித்தால், அயல்நாட்டில் வசிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாடு வாழ் இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்

KSS Rice.

 

 

 

From around the web