Tesla Car பாதுகாப்பு கேள்விக்குறியா..? பிரபல CEO மரண விசாரணையில் அதிர்ச்சி தகவல்

 
Angela Chao

பிரபல கப்பல் நிறுவனமான போர்மோஸ்ட் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி ஆஞ்சலா சாவோ உயிரிழந்த போது இருந்த உண்மையான சூழ்நிலை தற்போது வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ராஞ்சி பகுதியில், பிரபல போர்மோஸ்ட் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் US செனட்டர் மிட்ச் மொக்கனெஸ் மைத்துனியுமான பில்லினர் ஆஞ்சலா சாவோ கார் விபத்தில் கடந்த மாதம் உயிரிழந்தார்.

ஆரம்ப கட்டத்தில் அவர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், நடத்தப்பட்ட தொடர் விசாரணை பிறகு வெளியான அறிக்கையில் ஆஞ்சலா சாவோ(Angela Chao) உயிரிழந்த போது இருந்த உண்மையான சூழ்நிலை தற்போது தெரியவந்துள்ளது. அதில், அவர் வார இறுதியில் நண்பர்களுடன் ராஞ்சில் உள்ள விருந்தினர் மாளிகையில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு இந்த சம்பவம் நடந்தது.

Angela Chao

அங்கிருந்து தனது சொந்த இல்லத்திற்கு புறப்படும் போது, டெஸ்லாவை தவறாமல் ரிவர்ஸ் கியரில் வைத்துவிட்டதாகவும், இதனால் கார் பின்புறம் இருந்த குளத்தில் மூழ்கியதாகவும் அவர் பதற்றத்துடன் ஒரு நண்பரிடம் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. அத்துடன் அவர் காரின் கண்ணாடிகளை உடைத்து வெளியேற முயற்சி செய்துள்ளார் என்றும், ஆனால் அதில் தோல்வியடைந்து காருடன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

விபத்து குறித்த அவசர தகவல் கிடைத்ததும், நண்பர்கள், ராஞ்சி ஊழியர்கள் மற்றும் அவசரகால பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.  மூழ்கிய காரை உடைத்து வெளியேற்றுவது அல்லது பாதுகாப்பான இடத்திற்கு இழுத்துச் செல்ல ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முயற்சித்தனர். இருப்பினும் மீட்புக் குழுவினர் சாவோவை காரில் இருந்து வெளியேற்றுவதற்கு முன்பே அவர் உயிரிழந்துவிட்டார்.

Tesla

சாவோவின் மரணம் டெஸ்லா கார் பாதுகாப்பு குறித்த கவலைகளை, குறிப்பாக அவசர கால சூழ்நிலைகளில் மின்சார வாகனங்கள் தொடர்பான கவலைகளை  எழுப்பியுள்ளது. ஜன்னல்களை அணுகுவது மற்றும் மூழ்கிய மின்சார கார்களுக்கான அவசரகால பதில் நெறிமுறைகள் ஆகியவை பற்றிய கேள்விகளை இந்த சம்பவம் எழுப்புகிறது.

From around the web