வரி விதிப்பில் தள்ளாடுகிறாரா அதிபர் ட்ரம்ப்! மெக்சிகோ-கனடா நெருக்கடி?

கனடா மற்றும் மெக்சிகோ நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிப்பதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்து இருந்தார். பினன்ர் அதை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். சொன்ன தேதியில் நடைமுறைக்கு வரும் என்று கடந்த வாரம் உறுதியாகத் தெரிவித்தார்.
ஆனால் நேற்று வியாழக்கிழமை, கனடா, மெக்சிகோ பொருட்கள் மீதான கூடுதல் வரி விதிப்பை ஏப்ரல் 2ம் தேதிக்கு தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளார். முக்கியமான வணிக நிறுவனங்களுக்கு கூடுதல் சுமையிலிருந்து விலக்கு அளிப்பதற்காக இந்த நீட்டிப்பு என்று கூறப்பட்டுள்ளது. ட்ரம்ப் பின் இந்த அறிவிப்பை அடுத்து கனேடிய மற்றும் மெக்சிய பணத்தின் மதிப்பு உடனடியாக உயர்ந்துள்ளது.
முன்னதாக கனேடிய பிரதமரும் மெக்சிகோ அதிபரும் , ட்ரம்ப் பின் கூடுதல் வரிவிதிப்பு அமெரிக்கா மக்களை கடுமையாகப் பாதிக்கும். எங்கள் மீது திணிக்கப்படும் வணிகப் போரை நாங்கள் எதிர்கொள்வோம் என்று அறிவித்து இருந்தனர். கனடாவின் கச்சா எண்ணெய் அமெரிக்காவுக்கு பெருமளவில் வந்து கொண்டிருக்கும் நிலையில், ஐரோப்பிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விற்பனை செய்ய ட்ரூடோ முயற்சிகள் எடுத்துள்ளார். டெஸ்லா கார் உள்ளிட்ட அமெரிக்கப் பொருட்களுக்கு கூடுதல் வரிவிதிப்பை கனடாவும் அறிவித்தது.
இந்த வரிவிதிப்பு தனக்கு வாக்களித்த மக்களுக்கே கூடுதல் சுமையாக அமையும். அடுத்த ஆண்டு நவம்பரில் நடைபெறும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்வில் கட்சி கடும் பின்னடைவை சந்திக்கும் என்று தகவல்கள் கிடைத்த்தால் தான் இப்படி தள்ளிப் போட்டுக்கொண்டே போகிறார். விரைவில் கனடா - மெக்சிகோ - அமெரிக்கா சமரசப் பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என்று தெரிகிறது.