அமெரிக்காவில் இந்திய டாக்டர் சுட்டுக்கொலை.. கொரோனா தொற்றில் பலரை காத்தவருக்கு நிகழ்ந்த சோகம்!

 
Ramesh Babu

அமெரிக்காவில் இந்திய டாக்டர் ரமேஷ் பாபு சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம், திருப்பதி மாவட்டத்தை சேர்ந்தவர் டாக்டர் ரமேஷ் பாபு பெரம்செட்டி. இவர் 1986ம் ஆண்டு விஸ்கான்சின் மருத்துவக் கல்லூரி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார். தொடர்ந்து அமெரிக்காவில் டஸ்கலூசா உள்ளிட்ட நான்கு இடங்களில் பணிபுரிந்தார். இவருக்கு மனைவி, 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். அனைவரும் அமெரிக்காவில் குடியேறி உள்ளனர்.

gun

அமெரிக்காவின்  அலபமா  மாகாணத்தில் மிகவும் பிரபலமான மருத்துவர்களில் ஒருவராக இருந்தார். அவசர சிகிச்சை மற்றும் குடும்ப மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற இவர், மருத்துவ  சிகிச்சையில் 38 வருட அனுபவம் கொண்டவர் ஆவார். இவர், தான் படித்த ஆந்திரா மாநிலம், மவுனகுரு பள்ளிக்கு ரூ.14 லட்சத்தை நன்கொடையாக வழங்கியதுடன், தனது கிராமத்தில் கோவில் கட்டுவதற்கும் நன்கொடை அளித்துள்ளார்.

இந்நிலையில், டஸ்கலூசா நகரில் ரமேஷ் பாபு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச்சூட்டில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தெரிவிக்கின்றனர். என்ன சம்பவம், கொலைக்கு யார் காரணம் என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.

USA

அமெரிக்காவில் பல மருத்துவமனைகளில் பணிபுரிந்து புகழ்பெற்றவர் ரமேஷ் பாபு. கொரோனா காலத்தில் உள்ளூர் மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை அளித்து பலரது உயிரை காத்தவர்; இதற்கென அவருக்கு ஏராளமான விருதுகளும் தரப்பட்டுள்ளன. டாக்டர் தொழிலை சிறப்பாக செய்ததால், டஸ்கலூசாவில் உள்ள ஒரு தெருவுக்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web