வடிவேலு பட பாணியில்.. குடையை பாராசூட் போல் விரித்து 8வது மாடியில் இருந்து குதித்த நபர் பலி!! அதிர்ச்சி வீடியோ 

 
Russia

ரஷ்யாவில் குடையை பாராசூட் போல் விரித்தபடி 8-வது மாடியிலிருந்து குதித்த நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் சைபீரியா மாகாணத்தில் உள்ள நோவோசிபிர்ஸ்க் நகரில் நபர் ஒருவர் கட்டிடத்தின் எட்டாவது மாடியில் இருந்து குடையைப் பாராசூட் போல் பயன்படுத்தி குதித்துள்ளார். இதில் அவருக்கு தலை, கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

dead-body

இந்த சம்பவம் இன்று (மே 18) காலை நடந்துள்ளது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கூறுகையில், விழும் முன், சத்தமாக கத்தி கொண்டு அனைவரையும் தொந்தரவு செய்ததாகவும், அவர் நிறைய குடித்திருப்பதாகத் தோன்றியதாகவும் அவர் குடையுடன் பால்கனியிலிருந்து குடித்து கீழே விழுவதை பார்த்ததாக கூறினர்.

அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஆம்புலன்சை வரவழைத்து அவருக்கு முதலுதவி அளிக்க முயன்றனர். இருப்பினும், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அந்த நபர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவருக்கு 40 வயது இருக்கும் என்றும் அவரது தலையில் காயம் ஏற்பட்டதாகவும், கால் உடைந்ததாகவும் அக்கம் பக்கத்தினர் ஒருவர் தெரிவித்தார்.


தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்கு என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, அந்த நபர் கீழே விழுந்த காட்சியை கட்டிடத்தின் எதிரே உள்ள மற்றொரு குடியிருப்பிலிருந்த நபர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. 

From around the web