14 ஆண்டு ரகசிய அறையில்.. 1,000 முறைக்கு மேல் உடலுறவு.. இளம் பெண்ணை டார்ச்சர் செய்த 51 வயது நபர்!

 
Vladimir Cheskidov

ரஷ்யாவில் 51 வயதான நபர் ஒருவர் இளம் பெண்ணை 14 ஆண்டுகள் ரகசிய அறையில் வைத்து ஆயிரம் முறைக்கும் அதிகமாக உடலுறவு வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் செல்யாபிஸ்க் பகுதியில் வசித்து வருபவர் விளாடிமிர் செஸ்கிடோ (51). இவர் கடந்த 2009-ம் ஆண்டு 19 வயதுடைய பெண் ஒருவரை கடத்திச் சென்று சிறை வைத்துள்ளார். ரகசிய இடத்தில் அவரை சிறை வைத்த விளாடிமிர் செஸ்கிடோ அந்த பெண்ணுடன் 1,000 முறைக்கும் அதிகமாக உடலுறவு வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதேபோன்று மற்றொரு பெண்ணை கடந்த 2011-ம் ஆண்டு கொலை செய்ததாக விளாடிமிர் செஸ்கிடோ மீது புகார் எழுந்தது. இதற்கிடையே செஸ்கிடோவின் பிடியில் இருந்து தப்பிய எகாடெரினா என்ற அந்தப்பெண் போலீசில் நடந்தவை பற்றி கூறியுள்ளார்.

Vladimir Cheskidov

புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் செஸ்கிடோவை கைது செய்துள்ளார்கள். எகாடெரினா தப்பிச் செல்வதற்கு செஸ்கிடோவின் தாயார்தான் உதவி செய்துள்ளார். சிறிய தவறுகளுக்கு தன்னை அடித்து துன்புறுத்தியதாக செஸ்கிடோ மீது எகாடெரினா குற்றம் சாட்டியுள்ளார்.

கைது செய்யப்பட்ட செஸ்கிடோவிடம் இருந்து பல்வேறு பாலியல் விளையாட்டு பொம்மைகள், விலங்குகள், பாலியல் காட்சிகள் நிறைந்த சிடி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே செஸ்கிடோ தனது வீட்டின் பாதாள அறையில் எகாடெரினாவை சிறை வைத்திருந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

Vladimir Cheskidov

2009 ஆண்டு எகாடெரினாவுக்கு 19 வயது இருக்கும்போது அவரும் செஸ்கிடோவும் சந்தித்துள்ளார்கள். அப்போது மது அருந்த எகாடெரினாவை அழைத்த செஸ்கிடோ அவரை சிறைப்படுத்தியுள்ளார். இந்த நிகழ்வுகளால் எகாடெரினாவின் மனநிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

From around the web