எனக்கு 14 வயது தான்.. பள்ளி மாணவர்களை பாலியல் வலையில் வீழ்த்திய 23 வயது இளம்பெண்!

 
Florida

அமெரிக்காவில் 23 வயது இளம்பெண் ஒருவர் தன்னை 14 வயது சிறுமி என கூறி பள்ளி மாணவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் தம்பா நகரை சேர்ந்த அலைசா ஆன் ஜிங்கர் என்ற இளம்பெண் பாலியல் விருப்பத்துடன் டீன் ஏஜ் சிறுவன் ஒருவனை அணுகியுள்ளார். அவனை சந்தித்து, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட விரும்பி அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த தம்பா காவல்துறை ஜிங்கரை கைது செய்துள்ளது. இதன்பின்னர் நடந்த விசயங்கள் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளன.

ஜிங்கர் கைதுக்கு பின், 4 சிறுவர்கள் இதேபோன்று நாங்களும் பாதிக்கப்பட்டு உள்ளோம் என கூறி வந்தது போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்தது. இதற்கு முன் கடந்த ஆண்டு நவம்பரில், மாணவர் ஒருவனிடம் 30 முறை பாலியல் உறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காக ஜிங்கர் கைது செய்யப்பட்டார்.  பல மாணவர்களுக்கு ஆபாச வீடியோக்களையும் அப்போது அனுப்பியிருக்கிறார்.  அவர், தன்னை 14 வயது சிறுமி என கூறி கொண்டு பள்ளி மாணவர்களை தன்னுடைய வலையில் வீழ்த்தி உள்ளார்.

Florida

இதன்பின்னர் பல்வேறு மாணவர்களுடன் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளார். இதுபோல், தன்னிடம் சிக்கிய முதல் சிறுவனிடம் எண்ணற்ற முறை பாலியல் உறவை கொண்டிருக்கிறார். ஸ்னாப்சேட் வழியே ஆபாச வீடியோ ஒன்றை பல மாணவர்களுக்கு அனுப்பி அவர்களையும் ஈர்க்க பார்த்திருக்கிறார்.  இணையதளம் வழியே இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கிறார்.

அந்த முதல் சிறுவனுக்கு 12 முதல் 15 வயது இருக்கும் என கைது அறிக்கை தெரிவிக்கின்றது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் 12 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள். நடுநிலை பள்ளியில் படித்து வருபவர்கள் ஆவர். புளோரிடா மாகாணத்தில் பாலியல் உறவுக்காக ஒப்புதல் அளிக்கும் வயது 18 ஆக உள்ளது.


இதனால், சிறுவர்களை கவர்ந்திழுத்தது மற்றும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது என 11 குற்றச்சாட்டுகளை அலைசா ஜிங்கர் எதிர்கொண்டு இருக்கிறார். இணையதளம் வழியே பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது, சிறுவர் ஆபாச படம் வைத்திருத்தல் என பல குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக உள்ளன. கடந்த வெள்ளி கிழமை நீதிமன்றத்தில் முதன்முறையாக ஜிங்கர் ஆஜர்படுத்தப்பட்டபோது, இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார். இதனால், நாளை மீண்டும் இந்த வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.

From around the web