100 குழந்தைகளுக்கு தந்தையாக ஆசை.. ஒரே நாளில் 7 பெண்களைத் திருமணம் செய்த ரோமியோ! 

 
Habib Ssezzigu

உகாண்டாவில் ஒரே நாளில் அடுத்தடுத்து 7 பெண்களை ஒருவர் திருமணம் செய்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் முகோனோ மாவட்டத்தில் வசித்து வருபவர் ஹபீப் என்சிகோன்னே. இவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு முசன்யூசா என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த நிலையில், இவர் ஒரே நாளில் 7 பெண்களை திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஒவ்வொரு மணப்பெண்ணின் வீட்டிலும் நடத்தப்படும் ஆடம்பரமான பாரம்பரிய முஸ்லீம் திருமண முறைப்படி ஒரே நாளில் ஹபீப் தனது ஏழு பெண்களை மணந்துகொண்டார். 

உள்ளூர் ஊடக வெளியீட்டின் படி, ஹபீப் மிகவும் பணக்காரர் என கூறப்படுகிறது. அவர் தனது ஏழு மனைவிகள் மற்றும் அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை அன்றே தனது வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்ச்சியின் மூலம் தனது வாழ்க்கைத் துணைவர்கள் அனைவரையும் அழைத்துச் சென்றார்.

Habib Ssezzigu

மணமக்கள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. திருமண விழாவில் மணமகள்களுக்கு அனைவருக்கும் புதிய கார்களை பரிசாக வழங்கியுள்ளார், ஹபீப். அதுமட்டுமின்றி மனைவிகளின் பெற்றோருக்கும் பரிசுகள் வழங்கியுள்ளார்.

ஹபீப் அனைத்து மனைவிகளையும் தனித்தனியாக அவர்களது வீட்டில் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விழாவில் கலந்து கொள்ள ஹபீப்பின் மனைவிகள் வாகன அணிவகுப்பில் வீட்டிற்கு வந்தனர். இதில் 40 லிமோக்கள் மற்றும் 30 மோட்டார் சைக்கிள்கள் அடங்கும். இந்த விழாவிற்கு வந்திருந்த விருந்தினர்களும் இதனால் மிகவும் ஆச்சரியமடைந்ததாக கூறப்படுகிறது. அவர்களில் பலர் இதுபோன்ற ஒரு ஏற்பாடை இதற்கு முன்பு பார்த்ததில்லை என்று ஒப்புக்கொண்டனர்.

Habib Ssezzigu

இது இந்தியர்களுக்கும், பிற நாட்டினருக்கும் வினோதமாக இருந்தாலும் உகாண்டாவில் பலதார மணம் சட்டப்பூர்வமாக உள்ளது. இது அவரது குடும்பத்தில் சகஜம் என்றும் ஹபீப்பின் தந்தை கூறியுள்ளார். ஏழு பெண்களை திருமணம் செய்த பிறகும், ஹபீப் இன்னும் அதிகமாக திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார் என்றும் கூறப்படுகிறது. உண்மையில், அவர் 100 குழந்தைகளுக்கு தந்தையாக வேண்டும் என்பது ஆசை எனவும் கூறப்படுகிறது. 

வரவேற்பு நிகழ்ச்சியில் ஹபீப் தனது மனைவிகளை மிகவும் பாராட்டினார். தனது மனைவிகள் ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளவில்லை என்று அவர் கூறினார். அதனால்தான் ஹபீப் ஏழு பேரையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து ஹபீப் கூறுகையில், “நான் அனைவரையும் தனித்தனியாகச் மணந்துகொண்டேன். ஒரு பெரிய மற்றும் மகிழ்ச்சியான குடும்பத்தை உருவாக்க, நான் அனைவரையும் ஒரே நாளில் திருமணம் செய்துகொண்டேன்” என்றார். 

From around the web